பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

கேள்வியும்

அதற்காகத்தான் தளத்தருகில் ஜன்னல்கள் வைக்கப்படுகின்றன. ஆகவே நல்ல குளிர்ந்த காற்று கீழாக உள்ள ஜன்னல் வழியாக உள்ளே வரும். அசுத்தமான காற்று மேலாக உள்ள ஜன்னல் வழியாக வெளியே செல்லும்.

அவ்விதமாகக் கூரையருகில் ஜன்னல்கள் வைக்காவிட்டால் அசுத்தமான காற்று வெளியேறுவது எப்படி? நல்ல காற்று ஜன்னலின் அடிப்பாகத்து வழியாக உள்ளே வரும், அசுத்தக் காற்று ஜன்னலின் மேல் பாகத்து வழியாக வெளியே செல்லும். அதனால்தான் ஜன்னல்கள் சிறிதாக இருக்கக்கூடாது; காற்று வரவும் போகவும் கூடியதாகப் பெரிதாக இருக்க வேண்டும்.

ஆயினும் ஒரு ஜன்னல் இருப்பதைவிட இரண்டு ஜன்னல்கள் இருப்பது நல்லது. காற்று ஒரு ஜன்னல் வழியாக வந்து ஒரு ஜன்னல் வழியாகப் போகும். ஆதலால் இரவில் படுக்கை அறையின் வாசற் கதவை மூடிவிட வேண்டியிருந்தால், இரண்டு ஜன்னல்கள் உள்ள அறையில் உறங்குவதுதான் நல்லது.

227 அப்பா! வீட்டுக்குள் வர்ணம் பூசுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! வீட்டுக்கு வெளியே வர்ணம் பூசுவது அலங்காரமாகத்தான். ஆனால் வீட்டுக்குள் வர்ணம் பூசுவதை அப்படி எண்ணக்கூடாது. வீட்டுக்குள்ளும் வர்ணம் அலங்காரமாயிருக்கும். ஆனால் அது அலங்காரமாயிருப்பதோடு உடம்புக்கும் மனத்துக்கும் நன்மை செய்வதாயும் இருக்கிறது. நீல வர்ணம் பூசினால் சாந்தியாக இருக்கும். பச்சை வர்ணம் அதைவிட அதிகச் சாந்தி அளிக்கும். வெயிற் காலத்தில் அதிகக் குளிர்ச்சியாகவும் இருக்கும். மஞ்சள் வர்ணம் உற்சாகம் உண்டாக்கும். ஆனால் சிவப்பு வர்ணம் மட்டும் பூசக்கூடாது, அது கண்ணுக்குக் கெடுதல் உண்டாக்கும்.