152
கேள்வியும்
கட்டையைச் சுவரில் ஒட்டிப் பிடிப்பார் அப்பொழுது குண்டு சுவரைத் தொட்டும் தொடாமலுமிருந்தால் சுவர் செங்குத்தாக யிருப்பதாக அறிந்து கொள்வார்.
230 அப்பா! சுவர் கட்டும் பொழுது செங்கற்களை குறுக்கும் நெடுக்குமாக வைக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
தம்பி! சுவர்கட்டும் பொழுது செங்கற்களில் சுண்ணாம்பைப் பூசியே அடுக்கி வைக்கிறார்கள். அப்படிச் செய்வது செங்கல்லோடு செங்கல்லைப் பிணைத்து வைப்பதற்காகத்தான் ஆனால் சுவர் கீறுவதானால் செங்கற்கள் கீறாமல் சேர்த்த வாய்களில்தான் கீறும். அந்த வாய்கள் ஒன்றன் மீது ஒன்றாக ஒரே வரிசையாகக் கீழிருந்து மேலே வரை இருந்தால், சுவர் ஒரே வெடிப்பாகக் கீறிவிடும். அதனால் தான் செங்கற்களைக் குறுக்கும் நெடுக்குமாக வைத்துக் கட்டுகிறார்கள். முதல் வரிசையில் நீளத்தில் வைத்து ஆரம்பித்தால் அடுத்த வரிசையில் குறுக்கே வைத்து ஆரம்பிப் பார்கள். அல்லது ஒரே வரிசையிலே குறுக்கு நெடுக்குமாக வைத்தும் கட்டுவார்கள். இப்படிச் செய்வதால் வாய்கள் ஒன்றின்மீது ஒன்றாக வரா. அதனால் சுவரில் பாரம் ஏறினால் சுவர் கீறிவிடாமல் பலமாய் நிற்கும்.
231 அப்பா! சுவர் கட்டும்பொழுது செங்கற்களோடு சுண்ணாம்பும் சேர்க்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன? தம்பி! வெறும் செங்கற்களை மட்டுமே சுவராக அடுக்கி வைத்தால், அதன்மீது உத்தரத்தை தூக்கி வைத்ததும்