பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

155

தம்பி! இரண்டு வஸ்துக்களில் ஒன்று கடினமாயிருந்தால், கடினமான வஸ்துவைச் கொண்டு மற்ற வஸ்துவின் மீது தேய்த்தால் அந்த வஸ்துவில் ஒரு சிறு பாகத்தை அழித்துவிடும். கடுதாசியைவிடச் செங்கல் கடினமானது தான். ஆனால் செங்கல்லைக்கொண்டு தேய்த்தால் கடுதாசி கிழிந்து போகும். ஆனால் ரப்பரோ அதிகக் கடினமாயில்லை. கடுதாசியைவிடச் சிறிதே கடினம். அதனால் கடுதாசியில் ஒரு சிறிதே தேய்த்து எடுக்கும். அப்பொழுது அதில் எழுதியதும் போய்விடும். அதனால்தான் எழுதியதை அழிக்க ரப்பரை உபயோகிக்கிறோம்.

236 அப்பா! பேனா! "நிப்"பின் நடுவில் ஒரு சிறு துவாரம் இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! நாம் எழுதும்பொழுது நிப் மேலும் கீழுமாக அசைகிறது. அப்படி அசைந்தாலும், அழுத்தமாக எழுதினாலும் அதன் நுனி ஒடிந்துவிடாமல் இருப்பதற்குக்காரணம் அதன் நடுவில் ஒரு துவாரமும், அதிலிருந்து நுனிவரை ஒரு பிளவும் இருப்பதுதான். அதனால் நிப் எழுதும் பொழுது வளைந்து கொடுக்கிறது; கடுதாசியில் குத்துவதில்லை; மையைச் சிதறுவதில்லை.

அதோடு நிப் உள்வளைந்து இருக்கிறது. அதனால்தான் அது மையை வைத்துக்கொண்டு எழுத எழுதக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அப்பொழுது நிப்பின் நடுவிலுள்ள துவாரத்தில் ஒரு படலம்போல் காணப்படும். அதன் காரணத்தால்தான் மைகொட்டாமல் இருக்கிறது.

237 அப்பா! தபாலில் கடிதம் அனுப்பும்பொழுது தபால் தலை ஒட்டுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! அடுத்த தெருவிலுள்ள மாமாவுக்குச் செய்தி சொல்ல விரும்பினால், ஆள் சொல்லி அனுப்பலாம். ஆனால் அயலூரிலுள்ள அண்ணாவுக்கு அப்படி ஆள் அனுப்புவ