பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

கேள்வியும்


தென்றால் அதிகச் செலவாகும். நம்மைப் போலவே பலர்க்கும் செய்தி சொல்லி அனுப்ப வேண்டியிருக்கலாம். ஒவ்வொருவரும் ஆள் அனுப்பினால் எவ்வளவு சிரமும் செலவும் ஆகும்? அதற்காகத்தான் தபால் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அண்ணாவுக்கு கடிதம் அனுப்ப 15 நயா பைசா செலவு செய்தால் போதும். ஆனால் நேரில் தபால் நிலையத்துக்குப் போய் கடிதத்தையும் பைசாவையும் கொடுத்து வருவது சிரமமான காரியம். அதற்காகத்தான் படம் போட்ட தபால் தலை தயாரித்து விற்கிறார்கள். அதில் ஓன்று வாங்கி கடிதத்தின் மீது ஒட்டிவிட்டால் போதும். அண்ணாவிடம் கடிதம் போய்ச் சேர்ந்து விடும்.

தம்பி! இவ்விதம் தபால் மூலம் கடிதம் அனுப்பும் வழக்கம் மிகப் பழமையானது. ஆனால் அந்தக் காலத்தில் 'தபால் தலை' கிடையாது. அது முதன் முதலாக 1840-ம் வருஷத்தில் ஆங்கில நாட்டில்தான் ஏற்பட்டது. அதன்பின் 1854-ல் தான் துவாரம் துவாரமாகப் போட் டுக் கிழித்துக் கொடுக்கக்கூடிய தபால் தலைகளை ஆர்ச்சர் என்பவர் கண்டுபிடித்துக் கொடுத்தார்.

238 அப்பா! நாம் கல்லை மேலே எறிந்தால் அது மேலே போய்ப் பிறகு கீழேவந்து விழுகிறதே, அதற்குக் காரணம் என்ன? அப்பா! ஒவ்வொரு வஸ்துவுக்கும் மற்ற வஸ்துக்களைத் தன்னிடத்தில் இழுத்துக்கொள்ளும் சக்தி இருக்கிறது. அந்தச் சக்தி பெரிய வஸ்துக்களிடம் அதிகமாயிருக்கும்.