பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

157

சிறிய வஸ்துக்களிடம் குறைவாயிருக்கும். அதனால் பெரிய வஸ்து சிறிய வஸ்துவைத் தன்னிடம் இழுத்துக்கொள்ளும். பூமி சகல வஸ்துக்களையும்விடப் பெரிது. அதனால் அது உலகில் காணும் எல்லா வஸ்துக்களையும் தன்னிடம் இழுத்துக்கொள்ளும் சக்தி உடையதாய் இருக்கிறது. அதனால்தான் பழம் மரத்திலிருந்து பிரிந்தவுடன் அங்கேயே நிற்காமலும் மேல் நோக்கிச் செல்லாமலும் கீழே வந்து விழுந்துவிடுகிறது. பூமி அதைத் தன்னிடம் இழுத்துக் கொள்கிறது. நாம் கல்லை மேலே எறியும் பொழுது நம்முடைய சக்தி பூமியின் சக்தியை வென்று விடுகிறது. அதனால்தான் கல்லானது மேல்நோக்கிச் செல்கிறது. ஆனால் அப்படிச் செல்லும்பொழுது அதைப் பூமி தன்னிடம் இழுத்துக்கொண்டே இருப்பதால் நம்முடைய சக்தி சிறிது நேரத்தில் செலவாய்விடுகிறது. பூமியின் சக்தி கல்லைக் கீழே இழுத்துக்கொண்டு வந்து விடுகிறது.

239 அப்பா! சில படங்களில் உட்கார்ந்திருப்பவர் நாம் எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் நம்மையே பார்ப்பது போலத் தோன்றுகிறது. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! படம் எடுக்கும்பொழுது நாம் படம் எடுக்கும் காமராவைப் பார்த்துக்கொண்டுமிருக்கலாம், அல்லது அதைப் பாராமல் வேறு எதையாவது பார்த்துக்கொண்டுமிருக்கலாம். உட்கார்ந்திருப்பவர் காமராவைப் பார்த்துக் கொண்டிருந்தால்தான், படத்தை நாம் எந்தப் பக்கமிருந்து பார்த்தாலும் அவர் நம்மையே பார்ப்பதுபோலத் தெரியும். அவர் காமராவைப் பாராமல் உட்கார்ந்திருந்தால் படத்தை நாம் எங்கிருந்து பார்த்தாலும் அவர் நம்மைப் பார்க்கவே மாட்டார். படம் எடுக்கப் பலர் உட்கார்ந்து காமராவையே பார்த்துக் கொண்டிருந்தால், அப்பொழுது அந்தப் படத்தை இடது பக்கம் நின்றுபார்த்தால் அவர்கள் எல்லோரும் நம்மையே பார்ப்பார்கள். நாம் இடது பக்கமிருந்து வலதுபக்கம் போனால் அவர்களும் இடது பக்க