பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

கேள்வியும்

மிருந்து வலது பக்கம் திரும்புவது போல் தோன்றும். அது பார்க்க வேடிக்கையாயிருக்கும்.

240 அப்பா! வேஷ்டியில் பிரிந்துவரும் நூலைக்கொண்டு தைக்கக் காணோமே. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! வேஷ்டியில் பல நூல்கள் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னியிருக்கின்றன அதனால்தான் வேஷ்டி பலமாக இருக்கிறது. அதிலுள்ள நூல்கள் ஒவ்வொன்றும் தனியாக எடுத்துப் பார்த்தால் பலமுள்ளதாக இராது. அதனால் தைப்பதற்கு அத்தகைய நூல்கள் பலவற்றை ஒன்று சேர்த்து முறுக்குகிறார்கள். அப்படி முறுக்கப்பட்ட நூலைக்கொண்டு தைத்தால் பலமாயிருக்கும். கடையில் தைப்பதற்காக நூற்கண்டு விற்கிறார்களே, அது அவ்விதம் பல நூல்களைச் சேர்த்து முறுக்கியதாகும்.

241 அப்பா! தண்ணீருக்குள் கல் மூழ்கிவிடுகிறது. கட்டை மிதக்கிறது, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! கல்லின் நிறையைவிட கல்லின் அளவுள்ள ஜலத்தின் நிறை குறைவாகும். அதனால் கல் ஜலத்தில் மிதக்காமல் மூழ்கிவிடுகிறது. ஆனால் கட்டையின் நிறையை விட கட்டையின் அளவுள்ள ஜலத்தின் நிறை அதிகமாகும். அதனால் கட்டை ஜலத்தின் மூழ்காமல் மிதக்கிறது.

242 அப்பா! இரும்பு ஆணி ஜலத்தில் மூழ்கிவிடுகிறது, ஆனால் இரும்புக் கப்பல் கடலில் மிதக்கிறது அதற்குக் காரணம் என்ன?

தம்பி! இரும்பு ஆணியின் நிறைறைவிட இரும்பு ஆணியின் அளவுள்ள ஜலத்தின் நிறை குறைவாகும். அதனால்தான் இரும்பு ஆணி ஜலத்தின் மூழ்கிவிடுகிறது. அது போல் இரும்புக் கப்பல் மூழ்காததற்குக் காரணம் என்ன என்று கேட்கிறாய். தம்பி! ஆணியைப் போல கப்பல் ஒரே