பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

கேள்வியும்

யில்லை. அதற்குக் காரணம் கூறுகிறேன், கேள். ஆதியில் வெள்ளி நாணயங்களிலும் தங்க நாணயங்களிலும் வரிகள் கிடையா. அதனால் சிலர் அவற்றிலிருந்து கொஞ்சம் சீவி எடுத்துக் கொண்டார்கள். அது யார்க்கும் தெரியவில்லை. அதைத் தடுக்கும் பொருட்டுத்தான் வரிகள் அமைத்தார்கள். வரிகள் இருப்பதால் சீவினால் தெரிந்து விடும்.

ஆனால் மற்ற நாணயங்கள் செய்யும் லோகங்கள் அதிக விலையுள்ள தல்ல. அந்த நாணயங்களிலிருந்து யாரும் சீவி எடுக்க மாட்டார்கள். அதனால் அவற்றின் ஓரங்களில் வரிகளை அமைப்பதில்லை.

249 அப்பா! கதவுகள் சிலசமயம் பொருந்தியிருக்கின்றன, சில சமயம் பொருந்தியில்லை, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! மரத்தைப் பலகையாக அறுத்துக் கதவுகள் செய்கிறார்கள். ஆனால் மரத்தை வெட்டியதும் பலகையாக அறுத்து விடக்கூடாது. மரம் முழுவதும் நார்கள் தான். அந்த நார்கள் மெல்லிய குழாய்கள், அவற்றில் ஜலம் நிறைந்திரூக்கும், அதனால் மரத்தை வெட்டியதும் பலகையாக அறுத்துக் கதவு செய்தால், செய்தவுடன் பொருத்தமாய் இருக்கும், ஆனால் நார்களிலுள்ள ஜலம் வற்றியதும் சுருங்கிப்போய் இடைவெளி விழுந்து விடும், பொருத்தமாயிராது. ஆயினும் உஷ்ணகாலம் போய் மழை காலம் வந்தால் அந்த நார்கள் காற்றிலுள்ள ஜலத்தைக் குடித்துப் பருத்துவிடும்! கதவுகள் பழையபடி பொருந்தி விடும். ஆதலால் மரம் நன்றாய் ஆறியபின் அதாவது உலர்ந்தபின் பலவகையாக அறுத்துக் கதவு செய்தால் உஷ்ண காலத்திலும் மழை காலத்திலும் ஒன்றுபோல் பொருந்தியிருக்கும்.