பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

163

250 அப்பா! டப்பாக்கள் அநேகமாக உருண்டையாக இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! சதுரமான டப்பாக்கள் செய்வதைவிட உருண்டையான டப்பாக்கள் செய்வது எளிது என்பது ஒரு காரணம். அதோடு எது வளைவாக இருக்கிறதோ. அதற்குப் பலம் அதிகம். வீடுகளில் வளைவு போடுவது அதற்காகத் தான், அதனால் உருண்டையான டப்பாவாக இருந்தால் அதிகமாகப் பொழிந்து போகாது. மூலைகள் இல்லாததால் சுலபமாகக் கீறவும் செய்யாது.

திரவ வஸ்துக்கள் வைக்கும் டப்பாக்கள் வட்டமாக இருப்பதோடு அடி பாகத்தின் ஓரம் உள் வளைந்துமிருக்கும். திரவ வஸ்துக்கள் உஷ்ணத்தால் விரிந்து பொத்து விடாமல் இருப்பதற்காகவே இவ்விதம் பலப்படுத்துகிறார்கள்.

251 அப்பா! கர்ப்பூரம் இருந்தால் பூச்சிகள் வருவதில்லை. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! கர்ப்பூரம் ஒரு விஷ வஸ்து. பூச்சிகளைக் கொல்லக்கூடியது. அளவு கூடிவிட்டால் அது நமக்குக் கூட விஷம்தான். நாமுங்கூட இறந்து போவோம். கர்ப்பூரத்திடம் இன்னுமோர் விசேஷ குணம் இருக்கிறது. அந்தக் குணம் பூச்சிகளைக் கொல்லக்கூடிய சகல வஸ்துக்களிடமும் உண்டு என்று கூறலாம். அவைகள் தாமாகவே ஆவியாக மாறிக் காற்றில் பரவிவிடும். அந்தக் குணமில்லாவிட்டால் பூச்சிகள் அவைகளைத் தொட்டால்தான் சாகும். ஆனால் அவை காற்றில் ஆவியாகப் பரவுவதால் அந்த வாசனை பட்டதுமே பூச்சிகள் இறந்து விடுகின்றன. அதனால்தான் நீ கர்ப்பூரத்தை உன் பெட்டியில் ஒரு மூலையில் வைத்தாலும் பெட்டி முழுவதும் பூச்சிகள் இல்லாமல் இருக்கிறது.