பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

கேள்வியும்

252 அப்பா! கொல்லர் உலையில் இரும்புச் சிவக்கக் காய்கிறது, ஆனால் நம் வீட்டில் கெட்டில் அப்படிக் காய்வதில்லை, அதற்குக் காரணம் என்ன?

ஆமாம், கெட்டிலும் இரும்புதான் ஆனால் கெட்டிலில் ஜலம் வைத்துச் சுட வைக்கிறோம். அதனால்தான் கெட்டில்

சிவக்கக் காய்வதில்லை. கெட்டிலில் ஜலம்வார்த்துச் சுட வைக்கும் பொழுது, கெட்டிலும ஜலமும் ஒன்றுபோல் உஷ்ணமாய்க் கொண்டு வரும். ஆனால் ஜலம் கொதிக்க ஆரம்பித்து விட்டால் அதன்பின் வரும் உஷ்ணத்தை எல்லாம் ஜலமே கிரகித்துக்கொள்ளும். கெட்டிலோ ஜலம் கொதிக்க ஆரம்பித்தபொழுது இருந்த உஷ்ண நிலையிலேயே இருக்கும். இரும்பு சிவக்கக் காய்வதற்கு அந்த உஷ்ணம் போதாது. அதனால்தான் ஜலம்கொதிக்கும் பொழுது கெட்டில் சிவக்கக் காயாமல் இருக்கிறது. ஆனால் கெட்டிலை ஜலமில்லாமல் தனியாகக் காயவைத்தால் கொல்லர் உலை இரும்புபோலவே சிவக்கக் காய்ந்து விடும்.

253 அப்பா! கொல்லர் உலையில் இரும்பு சிவக்கக் காய்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! அந்த இரும்பை அதிக நேரம் காய வைத்தால் அது வெண்மையாக ஆகிவிடும். அதிகப் பிரகாசமாயிருக்கும். இவ்விதம் இரும்பு சிவப்பாகவும் வெண்மையாகவும் ஆவதற்குக் காரணம் என்ன?