பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

167

257 அப்பா! காயத்தில் தடவும் டிங்சர் ஐயோடின் முதலில் குளிர்ந்து பிறகு எரிகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஐயோடின் என்னும் வஸ்துவைச் சாராயத்தில் கரைத்தால், அதற்கு டிங்சர் ஐயோடின் என்று பெயர். சாராயம் எளிதில் ஆவியாக மாறக்கூடியது. அதற்கு நம் கையிலுள்ள உஷ்ணம் போதும். அப்படி நம் கையிலுள்ள உஷ்ணத்தைக் கிரகித்துக்கொள்வதால். நம் கை குளிர்ந்து போகிறது. அதைத்தான் டிங்சர் குளிர்ந்துவிட்டதாகக் கூறுகிறோம். ஆனால் ஐயோடின் என்னும் மருந்து காயமில்லாத இடத்தில் பட்டால் எரியாது. காயமுள்ள இடத்தில் பட்டால் ரத்தத்தோடு கலந்து எரிச்சல் உண்டாக்குகிறது. அதனால்தான் டிங்சர் ஐயோடின் முதலில் குளிர்ந்து பிறகு எரிகிறது.

258 அப்பா! சலவை செய்யும்பொழுது சட்டைகளுக்குக் கஞ்சி போடுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! சட்டைகளுக்குக் கஞ்சி போடாவிட்டால் அவை சீக்கிரத்தில் துவண்டு போகும்; அழகாயிரா. அதற்காகத் தான் கஞ்சி ஜலத்தில் தோய்த்து எடுத்து உலர வைக்கிறார்கள். அப்பொழுது ஜலம் ஆவியாக மாறி, கஞ்சிப்பசை மட்டும் சட்டையில் தங்கி நிற்கும். அது உலர்ந்ததும் ஒன்றாகச் சேர்ந்து துணியை விரைப்பாக இருக்கும்படி செய்கிறது. நமக்கு வேர்த்தால் அப்பொழுது சட்டையிலுள்ள கஞ்சிப் பசை நனைந்துபோய் சட்டை துவண்டு போகும்.

259 அப்பா! சோடா புட்டியைத் திறந்தால் ஜலம் பொங்குகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! சோடா புட்டியில் முதலில் ஜலம் ஊற்றி அதன் பின் அதற்குள் கரியமில வாயுவைத் திணித்து வைக்கிறார்கள். அந்த வாயு விரிந்து குண்டை புட்டியின் வாயை அடைத்துக்