பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

169

ஆக ஆகப் பாலிலுள்ள சர்க்கரையைச் சாப்பிட்டுப் "பால் புளிப்பு" என்னும் புளிப்பை உண்டாக்கிக் கொண்டு, அநேக உயிர்களாகப் பெருகுகின்றன. அதனால் தான் பால் வைத்திருந்தால் புளித்துப் போகிறது. அதே மாதிரிதான் மோரும புளித்து விடுகிறது. அப்படிப் பெருகும் உயிர்கள் உணவை எளிதாகச் சீரணிக்கச் செய்யும்; அதோடு அபாயகரமான நுண்ணுயிர்களை அழித்து விடவும் செய்யும். அதனால்தான் மோரை அதிகமாக குடிக்குமாறு வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

தம்பி! பாலும் மோருந்தான் இப்படிப் புளிக்கிறது என்று எண்ணாதே. சர்க்கரைச் சத்துள்ள வஸ்துக்கள் அனைத்துமே நேரம் ஆக ஆகப் புளித்துவிடும். அதற்கும் மேற்கூறியதே காரணம். நுண்ணுயிர்கள் அந்தச் சர்க்கரையை உண்டு புளிப்புச் சத்தை உண்டாக்கி விடுகின்றன. அதனால்தான் ஷர்பத் கரைத்து வைத்திருந்தால் புளித்துப் போகிறது. சாதத்தில் ஜலம் விட்டு வைத்திருந்தால் புளித்துப் போகிறது.

262 அப்பா! அழுகிப்போன பழத்துக்குள் புழு இருக்கிறதே அதற்குக் காரணம் என்ன?

ஆமாம், இதுபோல் எத்தனையோ ஆச்சரியமான விஷயங்கள் உள. சில சமயங்களில் மழை பெய்ததும் ஈசல் பறக்கிறது. அடுப்பு எரிக்கச் சாணத்தை எருதட்டி வைத்திருந்தால் அதில் தேள் காணப்படுகிறது. அரிசி முதலிய தானியங்களில் சிறு பூச்சிகள் தோன்றுகின்றன. சாதாரணமாக ஜனங்கள் மழை ஜலத்திலிருந்து ஈசலும், சாணத்திலிருந்து தேளும், தானியத்திலிருந்து பூச்சிகளும், பழத்திலிருந்து புழுக்களும் உற்பத்தியாவதாக எண்ணுகிறார்கள். ஆனால் அது தவறு. உயிரிலிருந்துதான் உயிர் உண்டாகும்; உயிரில்லாத வஸ்துவிலிருந்து உயிர் உண்டாக