பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

கேள்வியும்


கரியமிலவாயுவோடு சேர்ந்து ஒரு புது வஸ்துவாக மாறுகிறது. அது பச்சை நிறமாயிருக்கும். அந்தப் புது வஸ்துவைத்தான் களிம்பு என்று கூறுகிறார்கள். அது உடம்புக்குக் கேடு செய்யும் விஷமாகும். ஆனால் பீங்கான் வெறும் மண்தான். அதில் இரும்போ செம்போ கிடையாது. அதனால்தான் அது துருப்பிடிப்பதுமில்லை. களிம்பு ஏறுவதுமில்லை.

265 அப்பா ! குடம் விழுந்தால் உடையவில்லை. கூஜா விழுந்தால் உடைகிறது. அதே போல் கரண்டி விழுந்தால் உடையவில்லை, கண்ணாடி விழுந்தால் உடைகிறது, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! வஸ்துக்களுக்கு வேறு வேறு குணங்கள் உள. சில உடையும்; சில வளையும்; சிலவற்றைக் கம்பியாக இழுக்கலாம்; சிலவற்றைத் தகடுகளாக அடிக்கலாம். அந்தந்த வஸ்துவின் அணுக்கள் எந்த விதத்தில் சேர்ந்திருக்கின்றன என்பதைப் பொருத்ததாகும்.

குடம் செம்பால் செய்திருக்கும். செம்பு வளையும். கூஜா வெண்கலத்தால் செய்திருக்கும். வெண்கலம் உடையும்.

வெண்கலத்திலுள்ள அணுக்கள் செம்பிலுள்ள அணுக்கள் போல் இறுக்கமாகப் பிணைக்கப்பட்ட்டிருக்கவில்லை. அதுதான் காரணம். கரண்டி வெள்ளியால் செய்திருக்கும். அதன் அணுக்கள் இறுக்கமாகச் சேர்ந்திருப்பதால் கரண்டி கீழே விழுந்தால் வளைகிறது, முறிவதில்லை. கண்ணாடியோ