பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

173

உடைந்துவிடுகிறது. ஆனால் கண்ணாடியுங்கூடச் சிவக்கக் காய்ச்சிவிட்டால் உடையாமல் வளைந்து கொடுக்கும. அந்த குணம் அதற்கு இருப்பதால் தானே பலவிதமான கண்ணாடிச் சாமான்கள் செய்யமுடிகிறது.

266 அப்பா ! மலையில் ஏறக் கஷ்டமாயிருக்கிறது, இறங்கக் கஷ்டமாயில்லை, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! நாம் சமதளத்தில் நடக்கும்போது எதிரிலுள்ள காற்று நம்மைப் பின்னுக்குத் தள்ளுகிறது. நாம் காலைத் தூக்கியதும் காலின் கனம் அதைக் கீழே இழுக்கிறது. இந்த இரண்டு சக்திகளை மட்டுந்தான் எதிர்த்து நடக்க வேண்டியிருக்கிறது. அதனால் சமதளத்தில் நடப்பது அதிக சிரமமாயில்லை.

ஆனால் மலையின் மீது ஏறும்போது நாம் நம்முடைய உடம்பு முழுவதையுமே தூக்கி செல்ல வேண்டியிருக்கிறது. பூமியின் ஆகர்ஷண சக்தி நம்முடைய உடம்பைக் கீழே இழுத்துக்கொண்டே இருக்கிறத. நாம் அதை எதிர்த்துத் தான் ஏற வேண்டியிருக்கிறது. அதனால்தான் மலையில் ஏறுவது கஷ்டமாயிருக்கிறது. அப்படி மலையில் ஏறும்போது உண்டாகும் சிரமம் சமதளத்தில் நடக்கும்போது உண்டாகும் சிரமத்தைப்போல இருபது மடங்காகும் என்று அறிஞர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

ஆனால் மலையிலிருந்து இறங்கும்பொழுது பூமியின் ஆகர்ஷண சக்தி நமக்கு உதவி செய்கிறது. அதுவே நம்முடைய உடம்பைக் கீழே இழுத்துக்கொண்டு வந்துவிடுகிறது. நாம்தான் தலைகுப்புற விழுந்துவிடாமல் ஜாக்கிரதையாக இருந்துகொள்ள வேண்டும். அதனால்தான் மலையில் இறங்கக் கஷ்டமாயில்லை. நாம் ஒரு கனமான