பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

கேள்வியும்

வஸ்துவைத் தூக்கக் கஷ்டமாயிருப்பதற்கும், அதைக் கீழே வைக்க எளிதாய் இருப்பதற்கும் இதுவே காரணம்.

267 அப்பா! தரை சரசரப்பாய் இருந்தால் நடக்க முடிகிறது. வழவழப்பாய் இருந்தால் நடக்க முடியவில்லை. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! தரை வழவழப்பாய் இருந்தால் காலுக்குத் தரையில் பிடிப்பு இல்லாமல் இருக்கிறது. அதனால் கால் வழுக்கிப்போகிறது. தரை சரசரப்பாய் இருந்தால் காலுக்குப் பிடிப்பு உண்டாகிறது. அதனால்தான் கால் வழுக்காதிருக்கிறது. அதனால்தான் சிமின்ட்போட்ட தரை வழவழப்பாய் இருக்கக்கூடாது என்று கூறுவார்கள். அதிலும் வழவழப்பான தரையில் ஜலம் சிந்திவிட்டால் அதில் வெகு ஜாக்கிரதையாகவே நடக்கவேண்டும். இல்லையானால் வெகு எளிதில் வழுக்கி விழுந்து விடுவோம். இந்த விஷயம் காலுக்கு மட்டுமன்று, கைக்கும் இதேமாதிரிதான். அதனால்தான் "வழுக்குமரம்" வைக்கிறார்களே அதில் ஏற முடியாமல் போகிறது.

268 அப்பா! வண்டியிலிருந்து விழுந்தால் கால் ஒடியவில்லை; மரத்திலிருந்து விழுந்தால் கால் ஒடிந்து விடுகிறது. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஒரு செங்கல் துண்டைச் சுவரின்மீது மெதுவாக எறிந்தால் அது சுவரில் பட்டு கீழே விழுந்துவிடுகிறது. ஆனால் அதை எடுத்து ஓங்கி எறிந்தால் அது சுவரில் பட்டு உடைந்து விடுகிறது. இரண்டு தடவையும் எறியத்தான் செய்தோம். ஆனால் முதலில் அந்தச் செங்கல் துண்டு மெதுவாகச் செல்கிறது, ஓங்கி எறியும்