பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

175

பொழுது அதிக விரைவாகப் போகிறது. அதுதான் அது உடைவதற்குக் காரணம்.

அதுபோல் நாம் வண்டியிலிருந்தும் மரத்திலிருந்தும் விழத்தான் செய்கிறோம். ஆனால் மரத்திலிருந்து விழும் பொழுது, நம்முடைய உடம்பு அதிக வேகமாகக் கீழே வந்து சேர்கிறது. அதனால்தான் அப்பொழுது உடம்புக்குக் கேடு உண்டாகிறது.

வண்டியிலிருந்தும் நழுவி விட்டோம், மரத்திலிருந்தும் நழுவி விட்டோம், அதில் வித்தியாசம் ஒன்றுமில்லை. அப்படியிருக்க மரத்திலிருந்து விழுவதில் அதிக வேகம் வந்தது எப்படி? பூமியின் ஆகர்ஷண சக்திதான் காரணம். ஒரு வஸ்து எங்கிருந்து விழுந்தாலும் சரி, முதல் வினாடி 16 அடி வேகமாக விழும், இரண்டாவது வினாடியில் 48 அடி வேகமாக விழும், மூன்றாவது வினாடியில் 80 அடி வேகமாக விழும். இவ்விதமாக ஒவ்வொரு வினாடியிலும் 32 அடி வீதம் வேகம் கூடிக்கொண்டே வரும். அதனால் வண்டியிலிருந்து தரையில் வந்து சேரும்பொழுதுள்ள வேகத்தைவிட மரத்திலிருந்து தரையில் வந்து சேரும் பொழுதுள்ள வேகம் அதிகமாயிருக்கும். அதனால்தான் மரத்திலிருந்து விழுந்தால் கால் ஒடிந்து போகிறது.