பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கேள்வியும்

8 அப்பா! சூரியன் உதயமாகிறது. அஸ்தமிக்கிறது. அதற்குக் காரணம் என்ன?

ஆமாம், தம்பி! சூரியன் உதயமாவதாகவும் மறைவதாகவும் கூறுகிறோம். ஆனல் உண்மையில் சூரியன் அப்படி ஒன்றும் செய்வதில்லை. பூமி சுழல்வதால்தான் அப்படித் தோன்றுகிறது. நாம் ரயிலில் போகும்போது கவனித்திருக்கிறாயா? நாம் வண்டியில் உட்கார்ந்திருப்பதாகவும் வெளியிலுள்ள மரஞ்செடிகள் தான் ஒடுவதாகவும் தோன்றும். அதே போல் தான் நம்முடைய பூமி சுழன்றாலும் பூமி சுழலாமல் சூரியனே சுழலுவது போலத் தோன்றுகிறது. தம்பி! பூமி சுழலும்போது நாமிருக்கும் பாகம் சூரியனுக்கு நேரே வரும். அப்படி சூரியன் தெரிய ஆரம்பிப்பதையே நாம் சூரிய உதயம் என்று கூறுகிறோம். அதன்பின் பூமி சுழல்வதால் நாமிருக்கும் பாகம் சூரியனுக்கு நேராக இராமல் மாறிப்போகும். அப்படிச் சூரியன் மறைய ஆரம்பிப்பதையே சூரிய அஸ்தமனம் என்று கூறுகிருேம். இந்தச் சூரிய உதயத்துக்கும் அஸ்தமனத்துக்கும், இடையிலுள்ள நேரத்தில் சூரியன் தெரிந்துகொண்டிருக்கும், வெளிச்சமாய் இருக்கும். அந்த நேரத்தை பகல் என்று கூறுகிறோம். சூரிய அஸ்தமனத்துக்கும் உதயத்துக்கும் இடையிலுள்ள நேரத்தில் சூரியன் தெரியாது. இருட்டாய் இருக்கும். அந்த நேரத்தை இரவு என்று கூறுகிறோம்.

9 அப்பா!! பகலில் வெளிச்சமாய் இருக்கிறது. இரவில் இருட்டாய் இருக்கிறது. அதற்குக் காரணம் என்ன?

விளக்கு வெளிச்சத்தின் முன்னல் ஒரு பந்தைத் தூக்கிப் பிடி. அப்பொழுது என்ன பார்க்கிறாய்? பந்தின் பாதிப் பாகத்தில் வெளிச்சம் படுகிறது. மற்ருெரு பாதிப் பாகத்தில் வெளிச்சம் படவில்லை. இருளாயிருக்கிறது. அந்தப் பந்தின் வெளிச்சமாயிருக்கிற பாகத்தில் ஒரு புள்ளி வை!