பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

7

இப்போது பந்தைத் திருப்பு. முன்னால் வெளிச்சமாயிருந்த பாதிப் பாகம் இருளாய் விட்டது. இருளாயிருந்த பாதிப் பாகம் வெளிச்சமாய்விட்டது. நீ புள்ளி வைத்தாயே, அதுவும் இருளாய்விட்டது, இப்போது பந்தை மறுபடியும் திருப்பு. நீ வைத்த புள்ளி வெளிச்சத்துக்கு வந்துவிடும. இந்தவிதமாகப் பந்தைத் திருப்பிக்கொண்டிருந்தால் உன்னுடைய புள்ளி பாதி நேரம் வெளிச்சமாயும் பாதி நேரம் இருளாயும் இருக்கும்.

தம்பி! நாம் வசிக்கும் பூமியும் ஒரு பந்து மாதிரித்தான், உருண்டையாய் இருக்கிறது. எது எப்பொழுதும் பம்பரம் போல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. சூரியன் விளக்கு மாதிரி பூமியின்மீது பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. பந்தின் மேல் வைத்த புள்ளி மாதிரி தான் நாம் வசிக்கும் இட்ம். அதனால் நாமிருக்குமிடத்தில் பாதி நேரம் வெளிச்சமாகிறது; அதைத்தான் பகல் என்று கூறுகிறோம். பாதி நேரம் இருளாயிருக்கிறது; அதைத் தான் இரவு என்று கூறுகிறோம். நமக்கு இரவாயிருக்கும்போது பூமியின் அடுத்த பாதியில் இருப்பவர்களுக்குப் பகலாயிருக்கும்; நமக்குப் பகலாயிருக்கும்பொழுது அவர்களுக்கு இரவாயிருக்கும்.

10 அப்பா! பகல் முழுவதும் சூரியன் தெரிகிறது. ஆனால் இரவில் தெரியவில்லை. அது இரவில் எங்கே இருக்கும்?

தம்பி! சூரியன் பகலிலும் இரவிலும் ஒரே இடத்தில் தான் இருக்கிறது. பூமி தான் சுழன்று கொண்டிருக்கிறது. நாம் இருக்கும் பாகம் சூரியனுக்கு நேராக இருக்கும்போது சூரியன் தெரிகிறது. அதைத் தான் பகல் நேரம் என்று சொல்லுகிறோம். அந்த நேரம் முழுவதும் பூமி சுழன்று கொண்டிருப்பதால் மாலையில் நாமிருக்கும் பாகம் சூரியனுக்கு அப்புறமாகப் போய்விடுகிறது. அதனால் நாமிருக்கும் பாகத்துக்குச்சூரிய வெளிச்சம் வருகிறதில்லை. அதைத்தான்