பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

9

அதே காரணத்தினால் தான் காலையிலும் மாலையிலும் ஒளியிலுள்ள சிவப்புநிறக் கதிர்களைத் தவிர இதர நிறக் கதிர்கள் காற்றால் கிரகிக்கப்பட்டுச் சிவப்பு நிறக் கதிர்கள் மட்டுமே நம்மிடம் வந்துசேர்கின்றன. அதனால் தான் காலையிலும் மாலையிலும் சூரியன் சிவப்பாய்த்தெரிகிறது.

12 அப்பா காலையிலும் மாலையிலும் சூரியனைப் பார்க்க முடிகிறது. ஆனால் நடுப்பகலில் பார்க்க முடியவில்லையே அதற்குக் காரணம் என்ன?

தம்பி! காலைச் சூரியனுக்கும் மாலைச் சூரியனுக்கும் நமக்கும் இடையிலுள்ள தூரம் நடுப்பகல் சூரியனுக்கும் நமக்கும் இடையிலுள்ள தூரத்தைவிட அதிகம். அதோடு நடுபபகலில் சூரிய ஒளி அதிகமாகக் காற்று மண்டலத்தால் கிரகிக்கப்படுவதுமில்லை. சாய்க்கப்படுவதுமில்லை, அதனால் நடுப்பகலில் சூரிய ஒளி நேராகவும் அதிகமாகவும் வந்து சேருகிறது. ஆனல் காலையிலும் மாலையிலும் சூரிய ஒளியிலுள்ள பல நிறக் கிரணங்கள் காற்று மண்டலத்தால் கிரகிக்கப் பட்டுவிடுகின்றன. எஞ்சியுள்ள கிரனங்களும் நேராக வராமல் சாய்ந்தே வருகின்றன; அதிக துாரம் வர வேண்டியுமிருக்கிறது. அதனால் தான் காலையிலும் மாலையிலும் சூரியனைக் கண்கூசாமல் பார்க்க முடிகிறது. மத்தியானம் அப்படிப் பார்க்க முடியவில்லை.

13 அப்பா மாலையில் சூரியன் அஸ்தமிக்கும் பொழுது வானத்தில் பலவிதமான நிறங்கள் தோன்றுகின்றனவே அதற்குக் காரணம் என்ன?

ஆரஞ்சுப் பழத்தில் சுளையைத் தொடும்படியாக ஊசியைக் கொண்டு குத்து. அப்பொழுது ஊசி நேராகக் குத்தினால் செல்வதைவிட சாய்வாகக் குத்தினல் அதிக துாரம் செல்லும். நம்முடைய பூமியைச் சுற்றிக் காற்று மண்டலம் இருக்கிறது. சூரியன் நம்முடைய தலைக்கு நேரே