பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கேள்வியும்

இருக்கும்பொழுது அதன் கிரணங்கள் அந்தக் காற்று மண்டலத்துள் செங்குத்தாகப் புகுந்து நம்மிடம் வந்துசேர்கின்றன. சூரியன் மாலையிலும் அஸ்தமிக்கும் பொழுது அதன் கிரணங்கள் சாய்வாகவே நம்மிடம் வருகின்றன. அதனால் அதிகமான தூரம் காற்று மண்டலத்தில் வர வேண்டியிருக்கிறது. அதாவது காற்றிலுள்ள அதிகமான தூசியையும் புகையையும் கடந்து வரவேண்டியிருக்கிறது. அப்பொழுது தூசியும் புகையும் சில நிறக் கிரணங்களைக் கவர்ந்துகொண்டு மற்ற நிறக்கிரணங்களை நமக்கு அனுப்புகின்றன. அதுவும் எந்த நாளில் புகையும் தூசியும் அதிகமாக இருக்குமோ அந்த நாளில் தான் குரிய அஸ்தமனம் அதிக அழகாயிருக்கும்.

14 அப்பா வெயிலில்போனால் சுடுகிறது, நிலவில் போனால் குளிர்ந்திருக்கிறது. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! வெயில் சூரியனிலிருந்து புறப்பட்டு நேராக நமக்கு வந்து சேருகிறது. அதனல்தான் சுடுகிறது. ஆனால் சூரிய வெளிச்சம் சந்திரன் மீது பட்டு அங்கிருந்து நமக்கு வருவதைத்தான் நிலவு என்று கூறுகிறோம். அதனால் தான் நிலவு சுடாமல் குளிர்ந்திருக்கிறது. இதோடு வெயிலுக்கும் நிலவுக்கும் இன்னுமொரு வித்தியாசமும் உண்டு. வெயில் அடிக்கும்பொழுது வெயில் படுமிடத்தில் மட்டுமன்று, வீட்டுக்குள்ளே கூட எல்லாம் தெளிவாகத் தெரிகிறது. எள் கிடந்தால்கூட எளிதில் எடுத்து விடலாம். ஆனால் நிலவு எறிக்கும் பொழுது நிலவு படுமிடத்தில் கூட எதுவும் தெளிவாய்த் தெரிவதில்லை. இந்த வித்தியாசத்துக்கும் மேற் சொன்னது தான் காரணம்.

15 அப்பா! சில நாட்களில் அதிக உஷ்ணமாயிருக்கிறது, சில நாட்களில் அப்படியில்லை, அதற்குக் காரணம் என்ன? ஆமாம் சில நாட்களில் அதிக உஷ்ணமாகத்தான் இருக்கிறது. அதற்குப் பல காரணங்கள் உள. சூரியன்