பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கேள்வியும்

ஆமாம், சூரியன் பூமியைச் சுற்றவில்லை, பூமி தான் சூரியனைச் சுற்றுகிறது. அதில் சந்தேகமில்லை. ஆனால் அதைக்கொண்டு சூரியன் ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறது என்று எண்ண வேண்டாம். தம்பி! பூமி சூரியனைச் சுற்றுவதோடு தன்னைத் தானே சுழன்று கொள்ளவும் சுழன்றுகொள்கிறது. அதே மாதிரி சூரியனும் தன்னைத்தானே சுழன்றுகொள்கிறது.அது மட்டுமன்று.

ஜெர்மன் காப்டீன் முதலிய வான சாஸ்திரிகள் வானத்தில் காணும் நட்சத்திரங்கள் இரண்டு கூடடங்களாக இருப்பதாகவும், அவை ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் ஒடிக் கொண்டிருப்பதாகவும் அந்தக் கூட்டம் ஒன்றில் நம்முடைய சூரியன் சேர்ந்திருப்பதாகவும் கூறுகிறார்கள். நம்முடைய சூரியன் அவ்விதமாக ஓடும்போது தன்னைச் சுற்றிவரும் பூமி, செவ்வாய் புதன் முதலிய கிரகங்களையும், அந்தக் கிரகங்களைச் சுற்றிவரும் சந்திரன்களையும், இன்னும் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த வால் நட்சத்திரங்கள் முதலியவைகளையும் உடன் கொண்டு செல்லுகிறது. ஆனால் நம்மை எங்கே கொண்டுபோகிறது, இறுதியில் என்ன ஆகப்போகிறது என்ற விஷயம் மட்டும் யாராலும் சொல்ல முடியவில்லை.

17 அப்பா! கிரகணம் என்று கூறுகிறர்களே, கிரகணம் என்றால் என்ன?

தம்பி சூரியனை பூமி சுற்றுகிறது. பூமியைச் சந்திரன் சுற்றுகிறது. அதனால் சூரியனைப் பூமியும் சந்திரனும் சுற்றுவதாகக் கூறலாம். அப்படிச் சுற்றும்போது சில சமயம் சந்திரன் பூமிக்கும்; சூரியனுக்கும் இடையில் வந்துவிடும். அப்பொழுது சந்திரன், சூரியன் முழுவதையோ அல்லது ஒரு பகுதியையோ நமக்குத் தெரியாதபடி மறைத்துவிடும். அந்தமறைவைத்தான் சூரிய கிரகணம் என்று கூறுகிறோம்.