பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

13

அதேமாதிரி சில சமயம் பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வந்துவிடும். அப்பொழுது பூமி சூரியனுடைய ஒளி சந்திரன் மீது

விழாதபடி தடுத்துவிடும். அதனால் சந்திரன் நமக்குத் தெரியாது போகும். அந்த மறைவைத்தான் சந்திர கிரகணம் என்று கூறுகிறோம்.

பூமியைப்போலவே இன்னும் ஏழுகிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவற்றுள் புதனும் சுக்கிரனும்மட்டும் பூமியைவிடச் சமீபமாக இருந்துகொண்டு சூரியனைச் சுற்றி வருகின்றன. அதனால் அவைகளும் சில சமங்களில் பூமிக்கும்