பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கேள்வியும்

சூரியனுடைய ஒளி ஆரோக்கியம் தருவதாச்சே. சூரிய ஸ்நானம் செய்தால் எத்தனையோ நோய்கள் குணமாகும் என்று வைத்தியர்கள் கூறுகிறார்களே. அப்படியிருக்க சந்திரனில் பட்டுவரும் சூரிய ஒளி எப்படிக் கெடுதல் செய்யும்?

21 அப்பா! இரவில் நட்சத்திரங்கள் தோன்றுகின்றனவே' நட்சத்திரங்கள் என்றால் என்ன?

தம்பி! சூரியனைப்போல எத்தனையோ சூரியன்கள், இருக்கின்றன. அவைகளைத்தான் நட்சத்திரங்கள் என்று கூறுகிறோம். அப்படியானால் சூரியன் எவ்வளவு பெரியதாயும் பிரகாசமாயும் இருக்கிறது. நட்சத்திரங்கள் சிறு சிறு புள்ளிகள் மாதிரியும் மினுக்கு மினுக்கு என்றும்தானே இருக்கின்றன என்று கேட்பாய். ஆமாம். ஆனால் சூரியன் சமீபத்தில் இருக்கிறது. அதனால்தான் அது அவ்வளவு பெரியதாயும் பிரகாசமாயும் தெரிகிறது. ஆனால் உண்மையில் நட்சத்திரங்கள் எல்லாம் நம்முடைய சூரியனைவிட எத்தனையோ மடங்கு பெரியவை. எத்தனையோ மடங்கு பிரகாசமானவை. அவைகள் அதிக தூரத்தில் இருக்கின்றன. அதனால்தான் சிறியதாகவும் மின்னுவதாகவும் தோன்றுகின்றன.

22 அப்பா! நட்சத்திரங்கள், இமைகொட்டுவது போலத் தோன்றுன்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அறிஞர்கள் எத்தனையோ காரணங்கள் கூறுகிறார்கள். நட்சத்திரத்திலிருந்து வரும் வெளிச்சம், வரும் வழியில் ஏதோ மாறுதல் அடைகிறது. அதுதான் காரணம் என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியில்லை. அந்த வெளிச்சம் நம்முடைய பூமியைச் சுற்றியுள்ள காற்றில் வந்ததும் மாறுதல் அடைந்து விடுகிறது. அதுதான் காரணம் என்று வேறு சிலர் கூறுகிறார்கள். அதுவுமில்லை. நம்முடைய பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தின் எல்லேயில் நைட்ரோஜன் என்னும் வாயு பளிங்குபோல தூள்தூளாக உறைந்து கிடக்கின்றன. அவற்றின் ஊடே வரும்பொழுது