பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கேள்வியும்

அதிகமாக இருக்கும். அல்லது காற்றின் நிலையும் உஷ்ண நிலையும் வித்யாசமாயிருக்கும். அந்தக் காரணங்களினல் அதிகப் பிரகாசமில்லாத நட்சத்திரங்களின் ஒளி நம்மிடம் வந்து சேராமல் தடைப்பட்டுப் போகிறது. அதனால் அதிகப் பிரசகாசமான நட்சத்திரங்கள் மட்டுமே தெரிகின்றன. மற்ற நட்சத்திரங்கள் தெரியாமல் போகின்றன. அதனால்தான் வானசாஸ்திரிகள் தங்களுடைய தூரதிருஷ்டிக் கண்ணாடிகளைத் தெளிவான காற்றுள்ள பிரதேசங்களில் உயரமான மலைகளின் மீது அமைத்துக் கொள்கிறார்கள்.

31 அப்பா! இரவில் சில வேளைகளில் நட்சத்திரம் எரிந்து விழுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! சூரியனைச் சுற்றி பூமி ஒடுகிறது. அதுபோல் இன்னும் ஏழெட்டுக் கிரகங்களும் ஒடுகின்றன. அவற்றைப் போலவே சூரியனைச் சுற்றுபவை வேறும் உள. அவைகளை ஆங்கிலத்தில் காமட் என்று கூறுவார்கள். நாம் வால் நட்சத்திரம் என்கிறோம். ஆனால் அவை நட்சத்திரங்களே அல்ல. நட்சத்திரம் என்றால் சூரியனைச் சுற்றி வராது. நட்சத்திரங்களும் சூரியன்கள் தானே அல்லவா? அவை நட்சத்திரம்போல் பிரகாசமாயிருப்பதாலும் பின்புறம் வால் போல் நீண்டிருப்பதாலும் அவைகளை வால் நட்சத்திரங்கள் என்று கூறுகிறோம்.

அந்த வால் நட்சத்திரங்கள் ஒடும்பொழுதே உடைந்து விடுகின்றன. அவை ஒரு சமயம் பார்த்தவை போல் மறு சமயம் காணப்படுவதில்லை. அப்படி உடைந்துபோன வால் நட்சத்திரத் துண்டுகள் சில நம்முடைய பூமியின் மீதுள்ள காற்றில் வந்து சேரும், காற்றோடு உராய்ந்து தீப்பற்றும். அப்படித் தீப்பற்றிவிடும் வால் நட்சத்திரத் துண்டுகளைப் பார்த்துத்தான் நட்சத்திரம் எரிந்து விழுவதாக எண்ணிக் கொள்கிறோம்.