பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கேள்வியும்

இழுக்கும் சக்தி இருந்தால், பூமியைவிட எத்தனையோ மடங்கு பெரிதான சூரியனுக்கும் இழுக்கும் சக்தி இருக்கும் அல்லவா? ஆமாம் அதனால் தான் பூமி சூரியனை விட்டு ஓடி விடாமல் சதாகாலமும் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. பூமி ஒட முயல்கிறது. சூரியன் இழுக்கிறது. அதனால் பூமி ஒடுவதற்குப் பதிலாகச் சூரியனைச்சுற்றி வருகிறது. ஒரு கயிற்றின் ஒரு நுனியில் ஒரு கல்லைக்கட்டி அடுத்த நுனியைக் கையில் பிடித்து, அந்தக் கல்லைக் கயிற்றோடு சுற்றிப்பார். அப்பொழுது கல்லானது உன்னைச்சுற்றி வரும். நீதான் குரியன், கல்தான் பூமி, கயிறுதான் சூரியனுடைய இழுக்கும் சக்தி. இதே மாதிரிதான் சூரியனுடைய இழுக்கும் சக்தியால் இனனும் ஏழெட்டுக் கிரகங்கள் சூரியனைச்சுற்றி வருகின்றன, இந்தச் சூரிய குடும்பத்தைப்போல் எத்தனையோ கோடிக்கணக்கான குடும்பங்கள் உள. அவைகளைத் தான் நட்சத்திரங்கள் என்று கூறுகிறோம். அந்தக் குடும்பங்களும் ஒன்றோடொன்று இந்த விதமான இழுக்கும் சக்தியால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் தான் பிரபஞ்சம் முழுவதும் குழப்பமின்றி ஒழுங்காக நடந்து வருகிறது.

34 அப்பா! பூமி சுழல்வதாகச் சொல்லுகிறார்களே, அது எப்பொழுதுமே சுழன்று கொண்டுதான் இருக்குமோ, ஒரு நாளும் நிற்காதோ?

தம்பி! ஒரு பம்பரம் சுழல்கிறது. கொஞ்ச நேரம் சென்று சுழலாமல் நின்று விடுகிறது, அதற்குக் காரணம் என்ன? காற்று எதிர்ப்பது ஒன்று, தரை எதிர்ப்பது ஒன்று. காற்று இல்லாமலும் தரை வழவழப்பாகவும் இருந்தால் பம்பரம் நிற்காமல் சுழன்று கொண்டே இருக்கும்.

அதுபோல்தான் நம்முடைய பூமியும் எதிர்க்க ஒன்று மில்லாவிட்டால் சுழன்று கொண்டேதான் இருக்கும். பம்பரத்தை எதிர்க்கும் காற்று அதை எதிர்ப்பதில்லை. காற்று அதோடு சேர்ந்து சுழல்கிறதேயன்றி அதற்குப்புறம்பாக