பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

25

இருந்துகொண்டு அதை எதிர்க்கவில்லை. பூமி அந்தரத்தில் சுழல்கிறது வேறு வஸ்துவோடு உராய்வதில்லை அதனால் அது எப்பொழுதுமே சுழன்று கொண்டிருக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். ஆயினும் சுழல்வதை எதிர்க்கும் சக்திகளும் இருக்கவே செய்கின்றன. பட்சத்துக்கு ஒரு முறை சந்திரன் பூமிக்கு அருகில் வருவதால் கடலில் ஜலம் பொங்குவதாகக் கேட்டிருக்கிருய் அல்லவா? அதன் காரணம் சந்திரன் பூமியைத் தன்னிடம் இழுக்க முயல்வதேயாகும். பூமியைச் சுற்றிக் காற்று மண்டலம் இருக்கிறது; இவை இரண்டும் சுழல்கின்றன. அவற்றை எதிர்க்க அவற்றிற்கு வெளியே காற்றுக் கிடையாது. ஆனால் ஈதர் என்று ஒரு பொருள் இருக்கிறது. அதுவும் பூமியின் சுழற்சியைத் தடுக்கக்கூடும் அல்லவா?

ஆனால் இவை எல்லாம் இன்று நாளை பூமியைச் சுழல்வதால் நிறுத்திவிடப் போவதில்லை. எத்தனை யுகங்கள் செல்லுமோ யார் அறிவார்! ஆனால் என்றேனும் ஒரு நாள் சுழலாமல் நின்றாலும் நின்றுவிடலாம். அவவளவு தான் நாம் சொல்லமுடியும்.

35 அப்பா! பூமி சுழல்வதாகக் கூறுகிறார்களே, ஆகாய விமானத்தில் போனால் அதைப் பார்க்கலாமோ?

ஆமாம், பூமி மேற்கே இருநது கிழக்கே மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பெரிய பம்பரம்போல் சுழன்று கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அப்படிச் சுழல்வதை ஆகாய விமானத்தில் போய் பார்க்கமுடியாது. பூமியைச் சுற்றி எல்லாப் பக்கங்களிலும் ஒரே அளவாக வெகு தூரம்வரைக் காற்று மண்டலம் பூமியோடு சேர்ந்ததாகும். அதனால் பூமி சுழலும்போது அதுவும் சேர்ந்து சுழலுகிறது. ஆகாய விமானம் அந்தக் காற்று மண்டலத்துக்குள் தான் பறக்கும். அதற்கு வெளியே போகாது. அதனால் ஆகாய விமானமும் பூமியோடு சேர்ந்து சுழலவே