பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கேள்வியும்‌

இருக்குமோ காற்று மாதிரி இருச்குமோ யாரும்‌ சொல்ல முடியாது. இந்த நிலைமையில்‌ மனிதர்‌ அங்கே போவது எப்படி? பூமி கட்டியாயிருக்கும்‌ பாகமாகிய 40 மைல்‌ ஆழம்‌ வரை கூட நாம்‌ போகமுடியாது. அது வேண்டாம்‌; நிலக்‌கரி 2 மைல்‌ தூரம்‌ வரை இருப்பதாகக்‌ கண்டு பிடித்திருக்கறதே, அந்த தூரம்‌ வரை கூடப்‌ போசு முடியவில்லை. இரண்‌டாயிரம்‌ மூவாயிரம்‌ அடி ஆழமுள்ள நிலக்கரிச்‌ ௬ரங்கங்‌களில்‌ வேலைசெய்வதே கஷ்டமாயிருக்கறதேே, அப்படியிருக்க மனிதன்‌ பூமிக்குள்‌ வாழ்வது எப்படி? அங்கே போக முடியாது. போவதாக வைத்துக்‌ கொண்டாலும்‌ ஆவியாக மாறி அழிந்து போவான்‌.

39 அப்பா! பூமிக்கு உட்புறம்‌ ஒரே நெருப்பாக இருப்பதாகக்‌ கூறுகிறார்களே, அந்த நெருப்பு எப்பொழுது அணைந்து பூமி குளிர்ந்து போகும்‌?

தம்பி! பூமிக்கு உஷ்ணம்‌ சூரியனிடத்திலிருந்து கிடைக்‌கிறது. ஆனால்‌ பூமி பகலில்‌ கிடைக்கும்‌ உஷ்ணத்தை இரவில்‌ இழந்துவிடுகிறது. ஆயினும்‌ பூமியின்‌ பாதிபாகம்‌ இழக்கும்பொழுது இன்னொரு பாதிபாகத்துக்கு சூரிய னுடைய உஷ்ணம்‌ வந்து கொண்டிருக்கிறது. பூமியின்‌ உட்புறத்தில்‌ ஒரே நெருப்பாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால்‌ அந்த உஷ்ணம்‌ நிமிஷந்தோறும்‌ தரைக்கு வந்து காற்றில்‌ கலந்து மறைந்துபோகிறது. இதைக்‌ காரணங்களைக்‌ சொண்டு பூமிஒரு காலத்தில்‌ சந்திரன்‌ போலை குளிர்ந்து போகும்‌ என்று எண்‌ணிணார்கள்‌ .

ஆனால்‌ இப்பொழுது நாற்பது வருடங்களுக்கு முன்‌ புதிதாக ரேடியம்‌ என்ற தனிவஸ்து ஒன்று கண்டுபிடிக்கப்‌ பட்டிருக்கிறது மற்ற வஸ்துக்கள்‌ சூடாயிருந்தால்‌ அவற்‌றிற்கு உஷ்ணம்‌ பிற உஷ்ணமான வஸ்துக்களிலிருந்து வத்திருச்கும்‌? அல்லது அவை பிராணவாயுவோடு சேர்ந்து எரிவதால்‌ உஷ்ணம்‌ அடைந்திருக்கும்‌. ஆனால்‌ ரேடியமோ