பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கேள்வியும்

சக்தியை எதிர்த்து வேறு ஒரு சக்தியை உபயோகிக்கின்றன, அதனால்தான். வேறு சக்தியை உபயோகிக்கா விட்டால் உடனே கீழே விழுந்துவிடும். நாம் ஒரு கல்லைமேலே எறியும் பொழுதும் அதே போல ஆகர்ஷ்ண சக்திக்கு எதிராக நம்முடைய சக்தியை உபயோகிக்கிறோம். ஆனால் அந்தக் கல் மேலே செல்லுவதில் அந்தச் சக்தியை இழந்துவிடுகிறது. அப்பொழுது ஆகர்ஷ்ண சக்தி அதைக் கீழே இழுத்து விடுகிறது. கல் கீழே வந்து விழுந்து விடுகிறது. ஆகவே பூமியின் ஆகர்ஷ்ண சக்தியால்தான் தண்ணிர் கீழேயிருந்து மேலே பாயாமல் மேலேயிருந்து கீழே பாய்கிறது.

45 அப்பா! மாம்பழம் கீழே விழும்போது நேரே விழாமல் சுழன்றுகொண்டு வந்து விழுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

சாதாரணமாக ஏதேனும் ஒரு வஸ்துவைக் கீழே போட்டால் போடும்பொழுதே நாம் நம்மை அறியாமலே அதைச் சுழற்றி விடுகிறொம். ஆனால் மாம்பழம் விழும் பொழுது, மரம் அதைச் சுழற்றி விடுவதில்லை. ஆயினும் அந்தச் சமயம் காற்று அசையுமானால், அது பழத்தைச் சுழற்றி விடக்கூடும். அப்படிக் காற்று அசையாத காலத்திலுங் கூடப் பழம் சுழலும். பழம் விழும்பொழுது அதைப் பூமி தன்னிடம் இழுக்கிறது; காற்று விழாமல் தடுக்கிறது. காற்று பழம் முழுவதையும் ஒரே மாதிரி தடுக்குமானால் பழம சுழலாமல் வந்து விழும். ஆனால் பழம் பந்துபோல் உருண்டையாக இருப்பதில்லை. அதனால் ஏதேனும் ஒரு பாகத்தில் அதிகத் தடை உண்டாகும். அப்பொழுது பழம் சுழன்றுதான் விழும்.

46 அப்பா! குழந்தை வைத்திருக்கும் பொம்மையை எப்படிச் சாய்த்தாலும், சாய்த்துவிடாமல் உடனே நிமிர்ந்து விடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?