பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

கேள்வியும்‌

எண்ணாதே. பூமியின்‌ வெளிப்புறம்‌ அதாவது நாம்‌ எல்லோரும்‌ வசிக்கும்‌ பாகம்‌ கட்டியாகத்தான்‌ இருக்கிறது. மலைகளும்‌ குன்றுகளும்‌ பாறைகளும்‌ காணப்படவே செய்கின்றன. வெறம்‌ மண்ணாக இருக்கும்‌ பாசுத்தைக்கூட வெட்டுவது கடினமாகமேவே இருக்கிறது.

தம்‌பி! இந்த இடத்திலிருந்து அடுத்த பக்கம்‌ வரை தோண்டிக்கொண்டே போனால்‌, 8000 மைல்‌ தூரம்‌ தோண்ட வேண்டும்‌. ஆனால்‌ அத்த 8000 மைலும்‌ கட்டியாக இருக்கும்‌ என்று எண்ணாதே. இந்தப்‌ பக்கமும்‌ அடுத்த பக்கமும்‌ 40 மைல்‌ தரரம்தான்‌ கெட்டியான மண்‌. இடையில்‌ மண்‌ பாறை எல்லாம்‌ உஷ்ணத்தால்‌ ஓரே குழம்பாகத்தான்‌ இளகி நிற்கும்‌.

அப்படி உட்புறமுள்ள உஷ்ணம்‌ கட்டியான தரைக்கு வந்து காற்றில்‌ கலந்து மறைந்து போய்க்கொண்டே இருக்‌கிறது. அதனால்‌ உள்ளே குழம்பாக .இருப்பது உஷ்ணம்‌ குறைவதால்‌ சுருங்குகிறது. அப்படிச்‌ சுருங்குவது, கட்டியான தரை 40 மைல்‌ இல்லாமல்‌ மெல்லியதகாக இருக்குமிடத்தில்‌ உண்டாகுமானால்‌, அப்பொழுதுதான்‌ பூகம்பம்‌ உண்டாகிறது, வீடுகள்‌ ஆடுகின்றன. பூமியில்‌ வெடிப்புக்‌களும்‌ உண்டாகின்றன.

நம்முடைய தமிழ்நாடு அவ்வளவு மெல்லிதான பாகத்‌தில் இருக்கவில்லை. அதனால்‌ இங்கே பூகம்பம்‌ உண்டாகாது. ஆனால்‌ சில வேளைகளில்‌ ஏதோ நம்மையும்‌ வீட்டையும்‌ குலுக்குவது போல்‌ தோன்றும்‌. அகதுற்குக்‌ காரணம்‌ மெல்லிதான பாகத்தில்‌ உண்டாகும்‌ பூகம்பத்தால்‌ ஏற்படும்‌ அதிர்ச்சி நம்முடைய நாட்டுக்கும்‌ வந்து எட்டுவதேயாகும்‌.

48 அப்பா! எந்த ஊருக்காவது போனால்‌ திசை தெரியாவிட்டால்‌ திசைகளை அறிவது எப்படி?