பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

35

தம்பி ! பகல் நேரமாயிருந்தால் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று கூறி விடலாம். அந்த ஊருக்குச் சூரியன் உதித்த பின் போய்ச் சேர்ந்தால், சூரியன் வானத்திற்கு ஏறுவதையும் இறங்குவதையும் கவனித்துக் கிழக்கு மேற்கு கண்டு விடலாம். அதிலிருந்து வடக்கு தெற்கு கூறிவிடலாம்.

துருவ நட்சத்திரம்-சப்த ரிஷிகள்

இரவு நேரமாயிருந்தால் நட்சத்திரங்களைக் கொண்டு எளிதில் கூறிவிடலாம். வடக்கில் அடிவானத்துக்குக் கொஞ்சம் மேலாக ஏழு நட்சத்திரங்கள் தெரியும். அவைகளை சப்தரிஷிகள் என்று கூறுவார்கள். அவற்றில் ஒரு பக்கத்திலுள்ள இரண்டு நட்சத்திரங்கள் வழியாக ஒரு கோடு கிழித்தால், இரண்டுக்கு மிடையேயுள்ள தூரம் போல் 7 பங்கு தூரம் சென்றதும் ஒரு பெரிய நட்சததிரம் தோன்றும், அதுதான் துருவ நட்சத்திரம் என்று கூறப்படும். அது எப்பொழுதும் வடக்கேயே இருக்கும். அதைப் பர்த்து வட திசை அறிந்துகொண்டு மற்றத் திசைகளையும அறிந்துகொள்ளலாம்.