பதிலும்
41
மழை பெய்யுமுன் மேகங்கள் கறுப்பாக இருக்கும்; இது தான் காரணம்.
56 அப்பா! மேகங்கள் கறுப்பாக இருந்தாலும் அதன் ஓரங்கள் வெள்ளையாகப் பிரகாசிக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?
தம்பி! மேகத்துக்கு மேலே சூரியன் பிரகாசிக்கிறது அதனால் மேகத்தின் மேற்புறம் வெள்ளையாகவும் பிரகாசமாகவும் இருக்கும். ஆகாய விமானத்தில் போனால் அதைப் பார்க்கலாம். ஆனால் சூரிய வெளிச்சம் மேகத்தின் வழியாக நமக்கு வருவதில்லை. அதில் நீர்த்துளிகள் அவ்வளவு அதிகமாக அடர்ந்திருக்கும். அதனால்தான் அது கறுப்பாகத் தெரிகிறது. அத்தகைய மேகங்கள் அதிகம்பட்டுவிட்டால் வெயில்கூட மங்கலாகப் போய்விடும். ஆனால் மேகங்களின் ஒரங்கள் வழியாக வெளிச்சம் வரமுடியும் அதனால்தான் மேகங்கள் கறுப்பாயிருந்தாலும் அதன் ஒரங்கள் பிரகாசமாய் இருக்கின்றன. சில மேகங்கள் எல்லாப் பாகங்களிலுமே மெல்லியதாக,அந்த மேகங்கள் ஒரங்களில் மட்டுமன்று, பூராவுமே வெள்ளையாகவும் பிரகாசமாகவும் தோன்றுகின்றன.
57 அப்பா! வானத்தில் மேகங்கள் போகின்றனவே அவை பூமியிலிருந்து எவ்வளவு உயரத்தில் இருக்கும்?
தம்பி! அநேகமாக எல்லா மேகங்களும் சுமார் 3000 அடி உயரத்தில் காணப்படும். ஆனால் அவை குளிர் காலத்தில் இருப்பதைவிடக் கோடை காலத்தில் அதிக உயரத்தில் இருக்கும் என்று கூறலாம். அவை எவ்வளவுக் கெவ்வளவு உயரத்தில் இருக்கின்றனவோ, அவ்வளவுக் கவ்வளவு அதிக வேகமாக ஒடும். ஹேவார்டு என்னும்