பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

43

59 அப்பா! மேகமா இருக்கும் பொழுது அதிக உஷ்ணமாய்த் தோன்றுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! மேகமாயிருக்கும்பொழுது வெளியில் விசேஷமாக அதிக உஷ்ணம் உண்டாய்விடவில்லை. சாதாரணமாக உஷ்ணம் உண்டானால் அதை குறைப்பதற்காக வேர்வை உண்டாகி ஆவியாக மாறுமல்லவா? ஆனால் மேகமாயிருக்கும்பொழுது காற்றில் நீராவி நிறைந்திருக்கும். எப்பொழுதும் காற்று எவ்வளவு உஷ்ணமாயிருக் கிறதோ அவ்வளவு நீராவியைத் தான் தாங்கமுடியும். அதற்கு அதிகமாக நீராவியை ஏற்றுக்கொள்ளாது. அதனால் மேகமாயிருக்கும் பொழுது எவ்வளவு நீராவியை ஏற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவு நீராவியையும் ஏற்றுக் கொண்டாய் விடுகிறது. அந்த நீராவி எப்போது குளிர்வோம் என்றுதான் காத்துக்கொண்டிருக்கிறது. அதனால் மேற்கொண்டு நீராவி உண்டாக முடியவில்லை. ஆதலால் நம்முடைய உடம்பில் உண்டாகும் வேர்வை ஆவியாக மாறி உடம்பிலுள்ள உஷ்ணத்தைக் குறைக்க முடியாமல் போகிறது. அதனால்தான் நமக்கு மேகமாயிருக்கும் பொழுது அதிக உஷ்ணமாகத் தோன்றுகிறது, சங்கடமாயிருக்கிறது. ஆயினும் அப்பொழுது காற்று வீசுமானால் நீராவியுள்ள காற்று அகன்றுவிடுகிறது. அதனால் வேர்வை ஆவியாக மாற இடமுண்டாகிறது. அப்பொழுது அசெளகர்யம் நீங்கிவிடுகிறது.

60 அப்பா! இடியும் மின்னலும் உண்டாகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

வானத்தில் மேகங்கள் இருக்கும் பொழுதுதான் இடியும் மின்னலும் உண்டாகும். மேகங்களில் மின்சாரம் நிறைந்திருக்கிறது. அதனால் இரண்டு மேகங்களை நெருங்கும் பொழுது அவற்றிலுள்ள மின்சார சக்திகள் ஒன்று சேர இயலும். இடையிலுள்ள காற்று அப்பொழுது வெண்மையாகக்