பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

45

மழைத் துளிகள் இறங்குவதோடு சேர்ந்து தானும் கீழே பூமிக்கும் இறங்கிவிடும்; அதைத்தான் இடி விழுவதாகக் கூறுகிறார்கள். அப்படி இறங்கும் மின்சார சக்தி உயரமான கட்டடத்தின் வழியாவது, மரத்தின் வழியாவது பாயும். அப்பொழுது அந்த கட்டடத்தையும் மரத்தையும் பாழாக்கி விடும். அப்பொழுது அவற்றின் அருகில் நின்றால் நம்முடைய உடம்பிலும் பாய்ந்து நம்மையும் கொன்றுவிடும்.

ஆகவே இடி விழுவதென்பதில்லை. இடி நமக்குக் கேடு செய்வதுமில்லை. மின்னலையும் இடியையும் உண்டாக்கும் மின்சார சக்திதான் இறங்கி வருகிறது. அதுதான் நமக்குக் கேடு உண்டாக்கக்கூடும்.

63 அப்பா! இடி சில வஸ்துக்களின் மீது விழுகிறது, சில வஸ்துக்களின் மீது விழுவதில்லை, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! இடி என்பது ஒரு சப்தம்தான். அதனால் இடி விழுவதில்லை. இரண்டு மேகங்கள் நெருங்கும்போது அவற்றிலுள்ள மின்சார சக்திகள் ஒன்று சேர்கின்றன. அப்படி ஒன்று சேரும்பொழுது உஷ்ணம் உண்டாகுகிறது. அதனால் அருகிலுள்ள காற்று உஷ்ணமடைந்து விரிந்து மேலே கிளம்புகிறது. அது இருந்த இடத்துக்கு குளிர்ந்த காற்றுப் பாய்ந்து ஓடிவருகிறது. அதனால் உண்டாகும் சப்தத்தைத்தான் இடி என்று கூறுகிறோம்.

சில சமயங்களில் அப்படி ஒன்று சேரும். மின்சார சக்தி மழைத்துளிகளின் வழியாக பூமிக்கும் இறங்கிவிடும். அப்படி இறங்கும் இடம் வெட்டவெளியாக இருந்தால் அந்தச் சக்தி பூமிக்குள் போய்விடும். யாதொரு சேதமும் உண்டாகாது.