பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கேள்வியும்‌

ஆனால்‌ அந்தச்‌ சக்தி இறங்குமிடத்தில்‌ வஸ்துக்கள்‌ இருந்தால்‌, எந்த வஸ்து மூலமாகச்‌ சுலபமாக இறங்க முடியுமோ அதன்‌ மூலமாகவே இறங்கும்‌. ஒரு இரும்புத்‌ தூணும்‌ மரத்துணும்‌ இருந்தால்‌ இரும்புக்தூண்‌ வழியாகவே இறங்கும்‌. எனென்றால்‌ மின்சார சக்தி மரத்தூடு பாய்வதிலும்‌ இரும்பூடுதான்‌ எளிதில்‌ பாயும்.

அதனால்தான்‌ கட்டடங்களின்‌ மீது இரும்புத்தடி நட்டு, அதனுடன்‌ மெல்லிய கம்பியை இணைத்து, அதைக்‌ கீழே தரையில்‌ கிணற்றுக்குள்‌ கொண்டுபோய்‌ விட்டிருப்‌பார்கள்‌. அப்படிச்‌ செய்யாவிட்டால்‌ மின்சார சக்தி கட்டடத்தின்‌ வழியாக இறங்கிக்‌ சுட்டடத்தைத்‌ தகர்த்து விடும்‌. ஆனால்‌ இரும்புத்தடி நட்டிருந்தால்‌ அந்த மின்சாரசக்தி அந்தக்‌ தடி வழியாகக்‌ கீழே இறங்கிக்‌ கிணற்றுக்குள்‌ பாய்ந்துவிடும்‌. கட்டடத்துக்கு யாதொரு பழுதும்‌ உண்‌டாகாது. இந்த விதமான தடியை இடிவிலக்கி என்று கூறுவார்கள்‌.

64 அப்பா! மழைத்துளிகள்‌ எல்லாம்‌ உருண்டை வடிவாக இருப்பதற்குக்‌ காரணம்‌ என்ன?

தம்பி! ஜனங்கள்‌ சல சமயம்‌ கூட்டமாக நிற்பதைப்‌ பார்த்திருக்கிறாப்‌ அல்லவா? அவர்கள்‌ எல்லோரும்‌ ஒரு வட்டத்துக்குள்‌ நிற்பதில்லை. அங்குமிங்குமாக நிற்பார்‌கள்‌. ஆனால்‌ அவர்கள்‌ எல்லாரும்‌ நெருங்கி நிற்பதாகவும்‌ கூட்டத்தின்‌ வெளிப்புறத்தில்‌ நிற்பவர்கள்‌ கைகோர்த்து நிற்பதாகவும்‌ இருந்தால்‌ அப்‌பொழுது அந்தக்‌ கூட்டம்‌ எப்படி இருக்கும்‌? அதேமாதிரி ஜலத்தின்‌ நுண்ணிய துளிகளும்‌ கைகோர்த்து நிற்பதால்தான்‌ மழைத்‌ துளிகள்‌ உருண்டை வடிவமாகத்‌ தோன்றுகின்றன. ஆயினும்‌ அவை ஒன்றன்பின்‌ ஒன்றாக அதிக விரைவாய்‌ விழுமானால்‌ துளிகளாக விழாமல்‌ தாரையாக விழும்‌. அதையும்‌ நீ பார்த்திருப்பாய்‌.