பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

47

65 அப்பா அதிகமாக மழை பெய்தாலும் அவ்வளவு ஜலமும் காணுமல்போய் விடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! மழை நின்றதும் கொஞ்சம் ஜலம் சூரியனுடைய வெப்பத்தில் ஆவியாக மாறி காற்றில் கலந்து விடுகிறது. கொஞ்சம் ஜலம் மழை பெய்யும் பொழுதே தரையில் ஊறி விடுகிறது. அந்த ஜலத்தைக் கிரகித்துத் தான் செடி கொடிகள் எல்லாம் தழைத்துச் செழித்து வளர்கின்றன. அவற்றைத் தவிர தரைக்குள் அநேக விதமான புழுக்களும் பூச்சிக்களும் இருக்கின்றன. அவை அப்படித் தரையில் ஊறிய ஜலத்தைத் தங்கள் தேவைக்கு தக்கவாறு உபயோகித்துக் கொள்கின்றன. இன்னும் ஒரு பகுதி ஜலம் தரையில் ஆழமாக இறங்குகிறது. ஆனால் களிமண்ணோ கற்பாறையோ காணுமானால் அவற்றின் வழியாக இறங்க முடியாமல் நின்று விடுகிறது. அதனால்தான் சுனைகளும் கிணறுகளும் உண்டாகின்றன. இனி எஞ்சியுள்ள மழை ஜலம் குளங்களுக்கும் நதிகளுக்கும் போய்ச் சேருகிறது, இந்த விதமாகத்தான் மழை முழுவதும் காணாமற்போகிறது.

66 அப்பா! சில சமயங்களில் வானவில் தெரிகிறதே. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! சூரியனுடைய ஒளி நமக்கு வெண்மையாகத் தெரிகிறது.ஆனல் உண்மையில் பல நிறக் கதிர்கள் சேர்ந்து தான் வெண்மையாகத் தெரிகிறது. சரலாந்தரில் தொங்கும் முக்கோணக் கண்ணாடி வழியாகச் செல்லுமானால் வெண்மையான ஒளி பல நிறக் கதிர்களாகப் பிரிந்து விடும். அதேமாதிரிதான் மழை பெய்யும் பொழுது சூரியனுடைய ஒளி மழைத் துளிகளின் வழியாகச் செல்லும் போது பல நிறக் கதிர்களாகப் பிரிந்து தோன்றுகின்றன. அதைத் தான் வானவில் என்று கூறுகிறோம். இப்படி வானவில் தெரியவேண்டுமானல் 1. சூரியன் நமக்குப் பின்னால் தொடுவானத்துக்கு அருகில் இருக்க