பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கேள்வியும்

திறந்தால் அதன்மீது 200 மைல் உயரமுள்ள காற்று 100 பவுண்டு நிறையுள்ள வஸ்து மாதிரி அழுத்துகிறது. ஆயினும் அழுத்துவதாகத் தெரியவில்லையே. அதற்கு காரணம் என்ன?

கையை மேஜைமீது வைத்து அதன்மீது 100 பவுண்டு இரும்புக் குண்டை வைத்தால் கை நசுங்கிப்போகும். ஆனால் 100 பவுண்டு நிறையுள்ள காற்று நிற்கிறதே, கை நசுங்கவில்லை, கையில் ஒன்றுமே இல்லை, வெறுங்கை என்றுதானே கூறுகிறோம்.

கையை மேஜை மீது வைத்து அதன் மீது இரும்புக் குண்டை வைக்கும்போது, கையை பூமியும் மேஜையும் மேலே தள்ளுகிறது. இரும்புக் குண்டு கீழே தள்ளுகிறது. அதனால்தான் கையானது இரண்டுக்கும் நடுவே அகப்பட்டு நசுங்கி விடுகிறது.

ஆனால் இரும்புக் குண்டு வையாதபொழுது, கையை பூமியும் மேஜையும் மேலே தள்ளுகிறது. காற்று மேலே இருந்து கீழே தள்ளுகிறது. அது போலவே காற்று நாலு பக்கங்களிலிருந்தும் தள்ளுகிறது. அதனால்தான் கைக்குச சேதம் உண்டாகவில்லை; ஒன்றுமே அழுத்தாதது போல் இருக்கிறது.

இதே மாதிரி தான் ஜலத்தில் மீன்களுக்கு மேலே எவ்வளவு ஜலம் நின்றாலும் அழுத்துவதாகத் தோன்ற வில்லை. எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஜலம் ஏக காலத்தில் ஒரேவிதமாக அழுத்துகிறது.

73 அப்பா காற்றாடிக்குச் சிறகுகள் இல்லை, ஆயினும் அது பறக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆமாம், காற்றாடிக்குச் சிறகுமில்லை, அது காற்றை விடக் கனம் குறைந்ததுமில்லை. அதைப் பந்து போல்