பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

53

சுருட்டிவிட்டால் அரையடி உயரம்‌ ௯டச்‌ செல்லமாட்டாது. அப்படியிருக்க அது வெகு தூரம்‌ பறந்து செல்‌கிறதே அதற்குக்‌ காரணம்‌ என்ன? காற்றுக்கு வஸ்துக்களைத் தாங்கி நிற்கும்‌ சக்தி இருப்பதுதான்‌. காற்றாடி அதிக அகல மாயிருப்பதால்‌ காற்று அதைக்‌ கீழே விழவிடாமல்‌ தாங்கிக்‌ கொள்கிறது. அப்படித்‌ தாங்குவதற்கு காற்று அதன்‌ மேல்‌ சாடவேண்டும்‌. காற்று படகிலுள்ள பாயில்‌ சாடினால்‌ படகைத்‌ தள்ளிக்சொண்டு செல்கிறது அல்லவா? சாதாரணமாக இலைகள்‌ மரங்களிலிருந்து விழுந்து விடுகின்றன. அனால்‌ காற்று பலமாக வீசினால்‌ அவை மேலே கிளம்பி விடுகின்றன அல்லவா? அப்படிக்‌ காற்று காற்றாடி மீது சாடி, அதை உயரக்‌ கொண்டு போவதற்காகத்தான்‌ அதைச்‌ சாய்வாகப்‌ பிடித்துக்‌ கொள்கிறோம்‌.

74 அப்பா! பந்தில்‌ துவாரம்‌ ஏற்பட்டால்‌ துள்ளுவதில்லையே, அதற்குக்‌ காரணம்‌ என்ன?

தம்பி! பந்து ரப்பரால்‌ செய்திருக்கிறது; ரப்பருச்கு ஒரு விசேஷ குணம்‌ இருக்கிறது. அதன்‌ உருவத்தை மாற்றி வைத்தால்‌ அது தன்னுடைய உருவத்தை அடைய முயல்‌கிறது. அந்தத்‌ தன்மையால்தான்‌ பந்து துள்ளுகிறது, பந்தைத்‌ தரையில்‌ அடித்தால்‌ அதன்‌ உருண்டை உருவம்‌ மாறி தட்டையாகச்‌ செய்யப்படுகிறது. அது உடனே தன்‌ னுடைய உருண்டை உருவத்தை அடைய்‌ முயல்கிறது, அப்படி முயல்வதைத்தான்‌ துள்ளுகிறது என்று கூறுகிறோம்‌.

ரப்பர்‌ பந்து கட்டி ரப்பராக இருக்கும்‌, அல்லது ரப்பர்‌ பை செய்து காற்றைத்‌ திணித்துச்‌ செய்திருக்கும்‌. இரண்டு விதமான பந்துகளும்‌ துள்ளும்‌. ஆனால்‌ காற்றுள்ள பந்தே அதிகமாகத்‌ துள்ளும்‌. அதற்குக்‌ காரணம்‌ காற்றுள்ள பத்தில்‌ ரப்பருக்குள்ள குணம்‌ காற்றுக்கும்‌ உள்ளதாகும்‌: ரப்பர்‌ தன்‌ உருவத்தை மாற்றினால்‌ அதைத்‌ திரும்பப்‌ பெற முயலுவது போலவே காற்றும்‌ தன்‌ உருவத்தை மாற்றினால்‌