பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கேள்வியும்

அதைத் திரும்பப் பெற முயலும். அந்தமாதிரி குணமுடைய இரண்டு வஸ்துக்கள் சேர்ந்திருப்பதால்தான் காற்றுப் பந்து அதிகமாகத் துள்ளுகிறது. காற்றுப் பந்தில் ரப்பர் கொஞ்சம், காற்றே அதிகம். அதனால் அதில் துள்ளக் கூடிய வஸ்து காற்றேயாகும். அந்தக் காற்று வெளியே போய்விட்டால் அதன் பின் பந்து துள்ளுவது எப்படி? அதனால்தான் பந்தில் துவாரம் ஏற்பட்டால் துள்ளுவதில்லை.

75 அப்பா! பந்தைக் குத்தினால் காற்று புஸ் என்று போகிறது, கூஜாவைத் திறந்தால் அப்படிப் போகவில்லை. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஒரு பாத்திரத்தில் மண்ணோ ஜலமோ நிறைத்து விடுகிறோம். அதற்குமேல் அதில் நிற்காது. எவ்வளவு அழுத்திப் பார்த்தாலும் முதலில் இருந்தது தான் இருக்கும். அதற்குமேல் அணுவளவுகூட அதிகமாய் விடாது. ஆனால் பாத்திரத்தில் மண்ணோ ஜலமோ நிறைக்குமுன் காற்று இருந்ததல்லவா? அதோடு காற்றை வைத்து அழுத்தி அதிகமாகக் கொள்ளுமாறு செய்து விடலாம். அதிகமான காற்றை உள்ளே அழுத்திவைத்து மூடிவிட்டால் அவ்வளவு காற்றும் அதற்குள் அப்படியே இருக்கும். ஆனால் மூடியை எடுத்துவிட்டால் அதிகமாக அழுத்தி வைத்த காற்று வெளியே பாய்ந்து ஓடிவிடும்.

கூஜாவில் நாம் அதிகமான காற்றை அழுத்திச் சேர்த்து வைக்கவில்லை. அதனால் கூஜாவின் மூடியை எடுத்தால் காற்று வெளியே செல்லாமல் கூஜாவிலேயே இருந்து விடுகிறது. ஆனால் பந்தில் அதிகமான காற்று உள்ளே திணித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் ஊசியைக் கொண்டு குத்தினால், அந்தச் சிறு துவாரத்தின் வழியாக அதிகமாகத் திணித்து வைத்த காற்று புஸ் என்று கத்திக்