பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கேள்வியும்

குழாயை மைக்குள் வைத்தால் மையானது மைக் கூட்டில் நிற்கும் அளவுக்குக் குழாயிலும் நிற்கும். இரண்டிலும் காற்றின் அழுத்தல் ஒரே அளவாக இருப்பதுதான் காரணம் மைக்குள் இல்லாத நுனியில் விரலை வைத்து அடைத்துக்கொண்டு, குழாயை எடுத்தால் வெளியேயுள்ள காற்று அடுத்த நுனியில் அழுத்தி, மையைக் கீழே விழாமல் தடுத்துவிடுகிறது. அதன் பின் அந்த நுனியைப் பவுண்டன் பேனாவுக்குள் வைத்து அடுத்த நுனியிலிருந்து விரலை எடுத்து விட்டால் குழாய் வழியாகக் காற்று அழுத்தி மையைப் பவுண்டன் பேனாவுக்குள் செலுத்திவிடுகிறது.

77. அப்பா! எங்கு பார்த்தாலும் ஜலம் காணப்படுகிறது. அது எப்படி உண்டாகிறது?

தம்பி! சாதாரணமாக ஜலம் கடலிலும் கிணற்றிலும் காணக்கிடக்கிறது; நதியில் ஒடுகிறது. மழையாய் வருகிறது. ஆனல் எல்லா ஜலமும் ஒன்றுதான். கடலிலும் கிணற்றிலும் நதியிலுமுள்ள ஜலமும்தான். நீராவியாக மாறிப் பின் குளிர்ந்து மழையாகப் பெய்கிறது. அந்த மழை ஜலம் ஒடிக் கடலில் போய்ச் சேர்கிறது; தரையில் ஊறி கிணறுகளில் பெருகுகிறது. ஆதலால் ஜலத்தை நாம் யாரும் உண்டாக்கவுமில்லை. அது புதிதாக உண்டாகவுமில்லை. அது பூமியில் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது. ஆயினும் ஒரு தனி வஸ்து அன்று. ஹைட்ரோஜன் ஆக்ஸிஜன் என்னும் இரண்டு வாயுக்கள் சேர்ந்தே ஜலம் ஆகின்றது. இரண்டு வாயுக்களும் எரியக் கூடியவை. அவை எரிந்து, எரியாத ஜலமாக ஆவது இயற்கை அற்புதங்களில் ஒன்று.

78 அப்பா! ஜலம் எப்பொழுதும் ஒரே சமதளமாயிருக்கிறது, அதற்குக் காரணம் என்ன?

ஆமாம், மண்ணோ மாவோ மேடுபள்ளமாயிருக்க ஜலம் எப்பொழுதும் ஒரே சமதளமாகத் தான் இருக்கிறது அதற்குக் காரணம் சொல்லுகிறேன் கேள் . மண்ணை ஒரு