பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

57

பாத்திரத்தில் கொட்டினால், மண்ணின் ஒவ்வொரு அணுவையும் பூமி தன்னிடம் இழுக்கிறது. ஆனால் கன வஸ்துக்களிலுள்ள அணுக்களிடம் ஒன்றோடு ஒன்று பிணைந்து நிற்பதாகிய "சேர்க்கைச் சக்தி" உண்டு. அந்தச் சக்தி பூமியின் ஆகர்ஷண சக்தியை எதிர்ப்பதால்தான் மண்ணானது ஒரே சமதளமாய் இராமல் மேடு பள்ளமாய் இருக்கிறது. ஆனால் தண்ணீர் போன்ற திரவ வஸ்துக்களிடம் அந்தச் சேர்க்கைச் சக்தி கிடையாது. அதனால் ஜலத்தின் அணுக்களிடம் பூமியின் ஆகர்ஷண சக்தி மட்டுமே வேலை செய்கிறது. ஆதலால்தான் ஜலம் எப்பொழுதும் ஒரே சமதளமாய் நிற்கிறது.

79 அப்பா! தண்ணீரைக் கொதிக்க வைத்தால் பொங்கவில்லை, பாலைக் கொதிக்கவைத்தால் பொங்குகிறது, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! தண்ணிரைக் கொதிக்க வைத்தால், பாத்திரத்தின் அடிபாகமே முதலில் உஷ்ணமாவதால், அடிபாகத்திலுள்ள ஜலமே ஆவியாக மாறுகிறது. ஆவி ஜலத்தை விடக் கனக்குறைவு. அதனால் அது குமிழிகளாக மேலே கிளம்புகிறது. மேலே வந்ததும் உடைந்து காற்றோடு கலந்து விடுகிறது. அப்படி நடைபெறுவதைத் தான் ஜலம் கொதிப்பதாகக் கூறுகிறோம். ஜலம் முழுவதும் ஒரே வஸ்து, அதனால் குமிழிகளை எதுவும் தடுப்பதில்லை எத்தனை குமிழிகள் உண்டானாலும் காற்றில் வந்து கலந்து கொள்ளலாம்.

ஆனால் பால் ஒரே வஸ்து அன்று. அதில் பெரும் பாகம் ஜலம். அந்த ஜலத்தில் அநேக வஸ்துக்கள் கலந்திருக்கின்றன. ஆயினும் பாலில் ஜலம் மட்டும்தான் குமிழிகளாகக் கொதிக்கும் தன்மை உடையது. மற்றவைகளுக்கு அந்தத் தன்மை கிடையாது. அவற்றில் ஒன்று 'பால் ஊன் சத்து' என்பதாகும். பாலைச் சுட வைத்தால் அந்தச்