பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கேள்வியும்

சத்து மேலே வந்து மெல்லிய படலமாகப் படர்ந்துவிடுகிறது. அதன் பின்னே பாலிலுள்ள ஜலம் குமிழிகளாக மேலே கிளம்பி வருகிறது. அந்தக் குமிழிகள் பால் ஊன் சத்துப் படலத்தைக் கிழித்து விடுகிறது. அதனால்தான் பால் பொங்கிப் போகிறது.

சிலர் பால் காய்ச்சும்பொழுது, அதைக் கிண்டிக் கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பாய். அப்படிச் செய்தால் ஆடை படராது, ஆடையில்லையானால் குமிழ்கள் தாராளமாக வளரும். அப்பொழுது பால் பொங்காது. ஆனால் ஆடை படர்வதுதான் நல்லது. அந்த ஆடை பல ஜீவசத்துக்களை வெளியே போகாதபடி தடுத்து விடும். பால் பொங்குமே என்றால் அதைப் பெரிய பாத்திரத்தில் காய்ச்ச வேண்டும். அப்படிச் செய்யாமல் கிண்டிக் கொடுத்து ஜீவ சத்துக்களை இழந்து விடக்கூடாது.

80 அப்பா! ஜலத்தைத் தொட்டால் அது கையில் ஒட்டிக் கொள்கிறது. பாதரசத்தைத் தொட்டால் அது ஒட்டிக் கொள்ளவில்லை, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஜலம் ஒட்டிக்கொள்வதற்குக் காரணம் நம்முடைய தோலுக்கு ஜலத்தோடு சேர்வதற்கான கவர்ச்சி இருக்கிறது. ஆனால் கையில் எண்ணெயைத் தடவிக் கொண்டால் ஆப்பொழுது ஜலம் கையில் ஒட்டுவதில்லை. எண்ணெய் ஜலத்தோடு சேராது. பாதரசத்தைத் தொட்டால் நம்முடைய கை எண்ணெய் தடவியதுபோல் ஆகி விடுகிறது. நம்முடைய தோலுக்கு, பாதரசத்தோடு சேர்வதற்கான கவர்ச்சி கிடையாது. அதனால்தான் பாதரசம் கையில் ஒட்டுவதில்லை.

81 அப்பா! ஜலமும் எண்ணெயும் சேர்வதில்லையே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! எந்த வஸ்துவையும் சிறிது சிறிதாகப் பிரித்துக் கொண்டு போனால், இறுதியில் பிரிக்க முடியாத ஒரு