பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

கேள்வியும்

சளும் கலந்து விடலாம். அது தரையில் விழுந்தபின் அங்குள்ள வஸ்துக்களும் கலந்துகொள்ளும். ஆயினும் ஆற்று ஜலம், குளத்து ஜலம் ஆகியவற்றில் உப்புக்கள் குறைவாகவே இருக்கின்றன. அதனால்தான் அவை குடிக்க நன்றாய் இருக்கின்றன. அதுபோலவே சில கிணற்று ஜலத்திலும் உப்பு அதிகமாயிராது, குடிக்க நன்றாயிருக்கும். ஆளுல் பெரும்பாலான கிணறுகளில் அதிகமான உப்புக் கலந்து ஜலம் குடிக்க முடியாமல் இருக்கும்.

84 அப்பா! கொதிக்க வைக்குமுன் குடிக்க ருசியாயுள்ள ஜலம் கொதிக்க வைத்தபின் ருசியாயில்லையே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஜலத்தில் எப்பொழுதும் காற்று கரைந்திருக்கிறது. அதனால்தான் கொதிக்கவைக்கமுன் நன்ருயிருக்கிறது. ஆனால் அதைக் கொதிக்க வைத்தால் அதில் கரைந்துள்ள காற்று வெளியே போய் விடுகிறது. அது குளிரும் பொழுது அதில் கொஞ்சம் காற்று கரையும். ஆயினும் முன் போல் அதிகமான காற்று இல்லாததால் அந்த ஜலம் முன் போல் ருசியாய் இராது. அந்த ஜலத்தை ஒரு பாத்திரத்திலிருந்து மற்ருெரு பாத்திரத்துக்குப் பல முறை ஊற்றினால் அதில் அதிகமாகக் காற்று கரைந்து விடும். அப்பொழுது முன்போல் ருசி உண்டாகிவிடும். ஆற்றின் ஜலம் ஆழமில்லாமல் விரைவாக ஒடுமானால் அந்த ஜலத்தில்தான் அதிகமான காற்று கரையும். அதனால்தான் ஆற்று ஜலம் எல்லா ஜலத்தையும் விட அதிக ருசியாய் இருக்கிறது.

85 அப்பா! சில ஜலத்தில் சோப் தேய்த்தால் உடனே நுரை வந்து விடுகிறது, சில ஜலத்தில் நுரை வர நேரமாகிறது. அதற்குக் காரணம் என்ன? ஆமாம், சாதாரணமாக எந்த ஜலம் குடிக்க நன்றாயிருக்கிறதோ அந்த ஜலத்தில் சோப் நுரை சீக்கிரமாக வந்து விடும். ஆனால் எந்த ஜலத்தில் சுண்ணாம்பு கலந்திருக்கிறதோ