பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

63

இருந்தால் ஜலம் போய் நிறைந்து விடாதே? காலியாகவுள்ள பாத்திரத்தில் காற்று நிறைந்திருக்கிறது. அதனால் பாத்திரத்தை ஜலத்துக்குள் அமிழ்த்தினால் அந்தக் காற்று வெளியே போக மார்க்கமில்லை. காற்று வெளியே போகாததால் ஜலம் உள்ளே போக முடியவில்லை.

ஆனால் காற்றை அமிழ்த்த முடியும். அதனால் பாத்திரத்தை நன்றாக அமிழ்த்தினால் அதிலுள்ள காற்று சுருங்கி விடும்; அந்த இடத்தில் கொஞ்சம் ஜலம் ஏறும். ஆயினும் பாத்திரத்தில் போய் நிறைந்துவிடாது. ஆனால் பாத்திரத்தைச் சிறிது சாய்த்து அமிழ்த்தினால் காற்று வெளியே போக மார்க்கம் உண்டாய்விடும். அதனால் ஜலம் பாத்திரத்தில் போய் நிறைந்துவிடும்.

90 அப்பா! மலைகள் எல்லாம் உண்டானது எப்படி?

தம்பி! இப்பொழுதுள்ள மலைகள் எல்லாம் இதே போல் ஆதியிலிருந்தே இருந்து வருகின்றன என்று எண்ணாதே. மலைகளில் எல்லாம் உயர்ந்த மலை நம்முடைய இமயமலைதான். எவரஸ்ட் என்னும் இதன் சிகரம் ஐந்தரை மைல் உயரமாகும். அந்த மலையும் இடையில் ஏற்பட்டதே.

ஆதியில் பூமி வெறும் எரிகின்ற வாயு மண்டலமாகவே இருந்தது. அதன் பின்னர் கடலாகவும் தரையாகவும் மாறிற்று, அப்படி மாறிய காலத்தில் உஷ்ணம் அதிகப்படவே அந்த மண்ணும் ஜலமும் மேலே கிளம்பி எரிமலைகள் உண்டாயின. இந்த எரிமலைகள் தேய்ந்து அவற்றின் மண் நதிகள் மூலம் கடலில் போய்ச் சேர்ந்தது. அதன்பின் கடல்மண் உயர்ந்து பொங்கி மீண்டும் மலைகள் ஆயின. இப்பொழுது மலைகளின்மீது சிப்பிகள் காணப்படுவதே அதற்குப் போதிய சான்றாகும், இந்த விதமாக இமயமலை போன்ற எத்தனையோ மலைகள் உண்டாவதும் அழிவதுமாக நிகழ்ந்து வந்திருக்கின்றன.