பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

கேள்வியும்


91 அப்பா! மலைகளைத் துாரத்திலிருந்து பார்த்தால் நீல நிறமாகத் தெரிகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! காற்றில் ஏராளமான தூTசிகள் பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் மீது சூரிய வெளிச்சம் பட்டதும். அந்தத் துாசிகள் சூரிய வெளிச்சத்திலுள்ள நீல நிறக் கதிர்களைத் தவிர இதர நிறக் கதிர்களைக் கிரகித்துக் கொள்கின்றன. அதனால் காற்று முழுவதும் நீல நிறமாய் விடுகிறது. அதோடு காற்றில் நைட்ரோஜன் என்னும் வாயு அதிகமாய் இருக்கிறது. அந்த வாயு நீல நிறமானது. ஆகவே இந்த இரு காரணங்களாலும் காற்று நீல நிறமாகத் தோன்றும். ஆனால் அந்த நீலநிறம் குறைவாக இருப்பதால் நமக்கு அருகிலுள்ள காற்று நீலமாயிருப்பதாகத் தெரியவில்லை. அதனுாடு பார்க்கும்பொழுது வஸ்துக்களும் நீலமாகத் தெரியவில்லை. ஆனால் மலைகளைத் தூரத்திலிருந்து பார்த்தால் அப்பொழுது நமக்கும் மலைகளுக்கும் இடையிலுள்ள காற்று அதிகமாயிருப்பதால் அதனுாடு பார்க்கும் மலைகள் நீலநிறமாகத் தெரிகின்றன. அதே காரணத்தினால் தான் வானமும் நீல நிறமாகத் தெரிகிறது.

92. அப்பா! மலைகளின் உயரத்தை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?

தம்பி! நமக்கு மேலே இருநூறு மைல் உயரம் வரைக் காற்று நின்றுகொண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத வஸ்துவாயிருந்தாலும், காற்றுக்கும் கனம் உண்டு. அப்படியானால் நம்மீது நிற்கும் காற்று அவ்வளவும் எவ்வளவு கனம் உடையதாயிருக்கும்? காற்று இவ்விதம் அழுத்துகிறதே அதன் அளவைக் கண்டு பிடிச்க 300 வருடங்களுக்கு முன் இத்தாலி நாட்டு டாரி ஸெல்லி என்னும் அறிஞர் ஒரு கருவியைக் கண்டு பிடித்தார்.