பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

65

ஒரு பாத்திரத்தில் பாதரசம் வைத்துக் கொண்டார். 36 அங்குல நீளமுள்ளதும் ஒரு நுனி மூடியதுமான கண்ணாடிக் குழாயில் பாதரசத்தை நிரப்பி, பெருவிரலால் மூடி,

அதைத் தலை கீழாகப் பாத்திரத்திலுள்ள பாதரசத்துக் கடியில் வைத்து, அதன் பின் பெருவிரலை எடுத்து விட்டார், அப்பொழுது பாதரசம் குழாயில் 36 அங்குலம் உயரம் திற்காமல் 30 அங்குல உயரம்தான் நின்றது. காற்றானது பாத்திரத்திலுள்ள பாதரசத்தை அழுத்துவதன் மூலமாக குழாயில் 30 அங்குல பாதரசத்தை நிற்கும்படி செய்கிறது. நாம் தரையிலிருந்து மேலே போகப் போக காற்றின் அழுத்துதல் குறையும். அதனால் குழாயில் நிற்கும் பாதரசத்தின் உயரமும் குறையும். அதைக்கொண்டு மலையின் உயரத்தைக் கணக்கிட்டு விடலாம்.

ஆனால் எல்லா மலைகளின் மீதும் ஏறிவிட முடியாது, அதனால் மலைகள் மீது ஏறாமலே அவற்றின் உயரத்தைக் கண்டுபிடிக்க அறிஞர்கள் கணித சாஸ்திரம் மூலம் வழி கண்டுபிடித்திருக்கிறார்கள். அது உனக்கு எளிதில் விளங்காது. நீ பெரியவன் ஆனபின் அறிந்து கொள்ளலாம்.

93 அப்பா! மலைமீது சூரியன் சமீபமாயிருந்தும் அங்கே அதிகக் குளிராயிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

கு-5