பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

கேள்வியும்

தம்பி! பூமியின் மீது சூரியன் ஒளிவீசி உஷ்ணம் தருகிறது. ஆனால் நமக்குக் கிடைக்கும் உஷ்ணத்தில் பெரும் பாகம் பூமிக்குள் இருந்து வருவதுதான். அந்த உஷ்ணம் மேலே கிளம்பிப் போகவிடாமல் தடுப்பது பூமிமீது நிற்கும் காற்று மண்டலமாகும். அந்தக் காற்று கீழேயிருந்து மேலேவரை ஒரேவிதமாயில்லை. அடுக்கு அடுக்காக இருப்பதால் தரைக்கருகிலுள்ள காற்று அதிக அடர்த்தியாயிருக்கும். அதனால் தரைமீது அதிக உஷ்ணமாய் இருக்கும். ஆனால் மலைமீது காற்று அடுக்குக்கள் குறைந்து விடுகின்றன. அதோடு தரையின் உஷ்ணத்தை விட்டு மேலே வந்து விட்டோம். அதனால் சூரியன் சமீபமாய் இருந்தாலும் மலை மீது உஷ்ணமாயிராமல் குளிராக இருக்கிறது.

94. அப்பா மரஞ்செடிகள் வளர்வதுபோலப் பாறைகளும் வளர்கின்றனவா?

தம்பி! மரஞ் செடிகள் உயிருள்ளவை. அதனால் அவை வளரும். ஆனால் பாறைகளுக்கு உயிரில்லை. அதனால் அவை வளரா. ஆயினும் சில பாறைகள் நாளுக்கு நாள் பெரிதாகின்றன. அதன் காரணம் என்ன?

ஆதியில் பூமியானது கட்டியாயிருக்கவில்லை. வாயு ரூபமாகவே இருந்தது. அப்பொழுது ஆயிரம்மைல் வேகத்தில் சுழன்று கொண்டுதான் இருந்தது. அந்த சுழற்சியால் நாளடைவில் குளிர்ந்து சுருங்கி இறுகிவிட்ட து, அதன் காரணமாகத்தான் பாறைகள் உண்டாயின. ஆனால் நதிகள் பாறைகள் மீது ஒடி ஒடி அவைகளைப் பொடியாக்குகின்றன. அந்தப் பொடிதான் மணல். அந்த மணல் கடலில் போய்த் தங்கி அநேக இடங்களில் ஒன்றாகச் சேர்ந்து இறுகிக் கடற் பாறைகள் உண்டாகின்றன. அதோடு கடலில் அநேக சிறு பிராணிகளின் எலும்புக் கூடுகள் ஒன்றாகச் சேர்ந்து பவளத் தீவுகளாகவும் சுண்ணாம்புப் பாறைகளாகவும்