பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

67

ஆகின்றன. இந்த விதமாகத்தான் சில பாறைகள் பெரிதாய் வளர்கின்றன.

95 அப்பா நதிகள் எல்லாம் மலைகளிலேயே உற்பத்தி யாகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! கடல் ஏரி குளம் முதலிய நீர் நிலைகளிலுள்ள ஜலம் சூரிய வெப்பத்தால் நீராவியாக மாறி மேலே மேகங்களாகக் கிளம்பி வானத்தில் சஞ்சரிக்கும் விஷயம் அறிவாய். அந்த மேகங்களின்மீது குளிர்ந்த காற்று வீசினால் அப்பொழுது மேகங்களிலுள்ள நீர்த்துளிகள் பெருத்து மழையாகப் பெய்கின்றன. மலைகளின் மீது காற்று அடர்ந்திருப்பதில்லை. அதோடு மரஞ் செடிகளும் ஏராளமாக வளர்கின்றன. ஆதலால் அங்கேதான் அதிகமாக மழை பெய்கின்றன. அப்படிப் பெய்யும் ஜலம் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நதிகளாகின்றன. அதனால்தான் நதிகள் மலைகளிலேயே உற்பத்தியாகின்றன.

95 அப்பா! நதியிலே ஜலம் கரையோரத்தில் ஓடுவதை விட நடுவிலே அதிக வேகமாக ஓடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! நதியிலே ஜலம் கரையோரத்திலும் நடுவிலும் ஒரே வேகத்தில்தான் ஓட ஆரம்பிக்கிறது. ஆனால் கரையோரத்திலுள்ள ஜலத்தைக் கரைகள் ஒடவொட்டாமல் தடுக்க முயல்கின்றன. அதனால் அந்த ஜலத்தின் வேகம் குறைந்து விடுகிறது. ஆனால் நதியின் நடுவிலுள்ள ஜலத்தைக் கரைகள் தடுப்பதில்லை. அதனால் அங்கே வேகம் குறைவதில்லை. ஆதலால் நதியின் நடுவிலுள்ள ஜலம் கரையோரத்து ஜலத்தைவிட அதிக வேகமாக ஒடுகிறது.

97 அப்பா! நதி ஜலம் குடிக்க நன்றாயிருக்கிறது அதற்குக் காரணம் என்ன?