பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

69

தம்பி! பூமியில் நிலத்தைவிட கடல்தான் பெரிது. நிலம் 5½ கோடி சதுர மைல். ஆனல் கடலோ 14 கோடி சதுரமைல். அது மட்டுமன்று. நிலத்தில் உயரமான மலைகளிலிருந்தாலும், கடலில் அதைவிட அதிகமான ஆழங்கள் காணப்படுகின்றன. நிலத்தின் சராசரி உயரம் 2250 அடிதான். ஆனல் கடலின் சராசரி ஆழம் 12 ஆயிரம் அடியாகும். நிலத்தையும் கடல் ஜலத்தையும் படியால் அளந்தால், நிலத்தைவிட நீர் 13 மடங்கு அதிகமாகும். பஸிபிக் சமுத்திரம், அட்லாண்டிக் சமுத்திரம் இரண்டும் தான் பெரிய சமுத்திரங்கள். பஸிபிக் சமுத்திரம் நிலம் எவ்வளவு பரப்பு உடையதோ அவ்வளவு பரப்பு உடையது. அதாவது 54 கோடி சதுரமைல். பூமியின் உயர்ந்த எவரஸ்ட் சிகரத்தைவிட பஸிபிக் அதிக ஆழமுடையது. அதாவது ஆறு மைல்களுக்கு அதிகமாகும்.

100 அப்பா! கடலின் ஆழம் எவ்வளவு?

ஆமாம், தம்பி! கடல் ஆழம் உடையதுதான். ஆனால் எல்லா இடங்களிலும் ஒரே ஆழம் என்று எண்ணாதே. கடலின் ஆழத்தைக் கண்டு பிடிக்கப் பல காலமாக முயன்று வருகிறார்கள். இதுவரை ஒரு மைல் ஆழத்துக்கு அதிகமான இடங்கள் 6000 கண்டிருக்கிறார்கள். அவற்றுள் 1000 இடங்கள் நம் தேசத்தின் மூன்று பக்கங்களிலுமுள்ள இந்திய சமுத்திரத்தில் இருக்கின்றன. ஆனால் இந்திய சமுத்திரந்தில் இதுவரை கண்ட அதிகமான ஆழம் 3½ மைல்தான். பஸிபிக் சமுத்திரம்தான் அதிக ஆழம் உடையதாகும். அதன் அதிகமான ஆழம் ஆறு மைல்களுக்கு அதிகமாகும்.

101 அப்பா! கடல் இப்பொழுதுள்ளதைவிடப் பெரியதாக ஆகாதோ?

தம்பி! கடல் ஜலம் கூடுவதுமில்லை குறைவதுமில்லை. சூரியனுடைய உஷ்ணத்தால் கடல் ஜலம் ஆவியாக மாறி