பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கேள்வியும்

மேகங்களாகக் கிளம்பி, மேலே குளிர்ந்து மழையாசப் பெய்கின்றது. அந்த ஜலம் நதிகளில் பெருகி மறுபடியும் கடலையே போய்ச் சேர்ந்து விடுகிறது. அதனால் காற்றின் வித்தியாசத்தால் சில இடங்களில் கடல் ஜலம் தரையைச் சாப்பிட்டு உள்ளே வந்துவிடும். அதனால் அந்த இடத்தில் கடல் பெரிதாய் விட்டதுபோலத் தோன்றும். ஆனால் அதே சமயத்தில் வேறு எங்கேனும் ஓரிடத்தில் கடல் ஜலம் பின்வாங்கிப் போயிருக்கும். ஆனால் உண்மையில் கடல் பெருகுவதுமில்லை, குறுகுவதுமில்லே. ஒரே அளவாகத்தான் இருந்து வருகிறது.

102 அப்பா! கடலில் எப்பொழுதும் அலைகள் வீசுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

தம்பி! கடலில் அலைகள் வீசுவது காற்று வீசுவதால் தான். காற்றுத்தான் ஜலத்தை அசைத்து அலைகளாகச் செல்லுமாறு செய்கிறது. காற்றோ எப்பொழுதும் வீசிக் கொண்டிருக்கும். சில சமயம் மெல்லிய தென்றலாயிருககும். சில சமயம் கொடுங்காற்றாய் இருக்கும். சில சமயம் பெரும் புயலாயிருக்கும். ஆயினும் காற்று வீசாத நேரம் அபூர்வம். காற்று அசைந்தால் போதும். அலைகள் உண்டாய்விடும்.

ஆனல் சில சமயங்களில் நாம் நிற்குமிடத்தில் காற்று வீசாமல் இருந்தாலும் பெரிய அலைகள் காணப்படும். அதன் காரணம் என்ன? வேறு இடத்தில் காற்று வீசும். அங்கே அலைகள் உண்டாகும். அந்த அலைகள் தான் நாம் நிற்குமிடத்துக்கு வந்து சேருகின்றன. சில சமயங்களில் அவ்விதமாக நூற்றுக்கணக்கான மைல்கள் தூரங்கூட வருவதுண்டு.

சில சமயங்களில் வானத்தில் மேகமே இராது. சூரியன் அழகாகப் பிரகாசித்துக்கொண்டிருப்பான். அந்தச் சமயம் கடலில் அலைகள் தோன்றாமலிருக்கும். அதுபோலவே