பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

கேள்வியும்

அதனால்தான் அதிலுள்ள உப்பு நம்முடைய நாக்குக்குத் தெரியவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான நதிகள் லட்சக்கணக்கான வருஷ காலமாக உப்பைக் கொண்டு சேர்த்து வருவதால்தான் கடல் ஜலம் உப்பாக இருக்கிறது.

105 அப்பா! கடல் ஜலத்தில் நனையும் வேஷ்டி சீக்கிரம் உலர்வதில்லையே. அதற்குக் காரணம் என்ன?

தம்பி! கடல் ஜலம் உப்பாயிருக்கிறது என்று கூறும் பொழுது நாம் சமையலுக்கு உபயோகிக்கும் கறிப்புத் தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஆலை கடலில் கறியுப்போடு இன்னும் எத்தனையோ உப்புக்கள் சேர்ந்திருக்கின்றன. அவைகளில் "மக்னீஷியம் க்ளோரைட்" என்னும் உப்புக்கு ஈரத்தில் அதிகப் பிரியம். அதனால் வேஷ்டியிலுள்ள ஈரம் உலர்ந்தாலும், அந்த வஸ்து காற்றிலுள்ள ஈரத்தை உறிஞ்சிக்கொண்டே இருக்கும், அதனால்தான் கடல் ஜலத்தில் நனையும் வேஷ்டி சீக்கிரமாக உலர்வதில்லை. உலர்ந்தாலும் வேஷ்டி உப்பாக பிசுபிசு என்றே இருக்கும்.

106. அப்பா கடல் ஜலம் ஐஸானால் அந்த ஐஸ் உப்பாகவே இருக்குமோ?

தம்பி! கடல் ஜலத்தையும் ஐஸ் ஆக உறைய வைக்கலாம். ஆனால் அப்படி உறையும்பொழுது ஜலம் மட்டுந் தான் ஐஸ் ஆக உறையும். அந்த ஜலத்திலுள்ள உப்பு தனியாகப் பிரிந்து தங்கிவிடும். அதனால் கடல் ஜலத்தில் செய்த ஐஸ் கடல் ஜலத்தைப்போல உப்பாக இருக்காது. நல்ல ஜலத்தில் செய்த ஐஸைப் போலவே இருக்கும்.

107 அப்பா கடற்கரை எல்லாம் மணலாகவே இருக்கிறதே அதற்குக் காரணம் என்ன?

தம்பி! ஆதியில் கடல் உண்டான காலத்தில் கடற்கரையில் மணல் இருக்கவில்லை. கற்பாறைகளாகவேதான்