பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிலும்

73

இருந்தன. ஆளுல் காற்று அடித்துக் கடலில் அலைகள் உண்டானதும், அந்த அலைகள் கரையிலுள்ள பாறைகள் மீது மோதிக்கொண்டே இருந்தன. அதனால் பாறைகள் கரைந்து பொடியாகி மணலாய்விட்டன. அதோடு நதிகளும் கடலில் ஜலத்தைக் கொண்டு வந்து சேர்ப்பது போலவே வழியிலுள்ள பாறைகளைக் கரைத்து மணலையும் கொண்டுவந்து சேர்க்கின்றன. இந்த இரண்டு விதத்திலும் சேர்ந்த மணலை அலைகள் கரையில் கொண்டுவந்து கொட்டிக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான் கடற்கரையில் மணலாக இருக்கிறது. சில இடங்களில் இப்பொழுதும் பாறைகளே காணப்படுகின்றன. அவைகளும் நாளடைவில் அலைகள் மோதுவதால் மணலாய்விடும் என்பதில் சந்தேகமில்லை.

108 அப்பா! கடற்கரையில் நின்று பார்த்தால் கடலும் வானமும் தொடுவது போலத் தெரிகிறதே, அது எவ்வளவு தூரம் இருக்கும்?

தம்பி! கடலும் வானமும் தொடுவதாகத் தோன்றுகிறதே, அதேமாதிரி வெட்ட வெளியான மைதானத்தில் நின்று பார்த்தால், தூரத்தில் நிலமும் வானமும் தொடுவதாகத் தோன்றும். அதைத்தான் தொடுவானம் என்று கூறுவார்கள். அந்தத் தொடுவானத்தின் தூரம் நாம் இருக்கும் இடத்தின் உயரத்தைப் பொறுத்ததாகும். கடற்கரையிலோ மைதானத்திலோ நின்று பார்த்தால் இரண்டரை மைல் துரம்வரை தெரியும். ஆனால் 100 அடி உயரமுள்ள கோபுரத்தின் மீது நின்று பார்த்தால் 13 மைல் துாரம் பார்க்க முடியும்.

அதிக உயரத்தில் இருந்தால் அதிகத் துாரம் பார்க்க முடிவதன் காரணம் என்ன? பூமியானது உருண்டை வடிவாய் இருப்பதுதான் காரணம். ஒரு தெரு வளைந்திருப்பதாக வைத்துக்கொள். அப்படி வளைந்துள்ள இடத்திலிருக்கும்